யார் அந்த 19 பேர்? மரண தண்டனை விதிக்கப்படவுள்ளவர்களின் பெயர் பட்டியல் தயார்!

0
281

பாரியளவு போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 19 பேரின் பெயர் பட்டியல் ஜனாதிபதியிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது.

நீதி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு அமைவாக இந்த பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் போதைப்பொருள் பாவனை வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக மரண தண்டனையை அமுல்படுத்த அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.

இதனையடுத்து, போதைப்பொருள் வியாபாரத்துடன், தொடர்புடைய சிறைக்கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு கையெழுத்திடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பாரியளவு போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 19 பேர் உள்ளடங்கிய பெயர் பட்டியல் ஜனாதிபதியிடம் இன்று கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: