யாரும் பார்த்திடாத அரிய புகைப்படம்! பின்னணி இல்லாமல் நுழைந்த நடிகருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!

0
383

நடிகர் அஜித் குமார் தமிழ்த் திரையுலகில் எந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல் நுழைந்து தனது கடின உழைப்பால் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை இன்றும் வைத்திருப்பவர்.

அஜித் குமார் ரசிகர்கள் மனத்தில் ‘தல மற்றும் அல்டிமேட் ஸ்டார்’ என்றும் நிலையாக நிலைத்திருப்பவர். இது அவரின் உழைப்புக்கு ரசிகர்கள் கொடுத்த அங்கீகாரம்.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விஸ்வாசம் திரைப்படம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருந்தார்கள்.

படத்தின் டீசர் அல்லது இரண்டாவது லுக் தொடர்பான அறிவிப்பாக இருக்குமெனப் பார்த்தால் கொட்டப்பாடி ஜே ராஜேஷின் கேஜேஆர் ஸ்டுடியோ நிறுவனம் விஸ்வாசம் படத்தின் தமிழக திரையரங்க உரிமையை வாங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், தல படத்தை எதிர்ப்பார்த்து அவரின் சிறுவயது புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

அவரின் அடுத்த படத்துக்காக காத்திருப்பதாகவும், அவர் கடந்து வந்த பாதைகளை நினைவு கூறுவதாகவும், இதனால் ரசிகர்கள் பெருமை கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

குழந்தையாக இருந்த போது எடுக்கப்பட்ட பல அரிய புகைப்படங்கள் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

தெலுங்குத் திரைப்படத்தில், துணைக் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து, தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட முன்னணி நடிகர்களுள் ஒருவர் என்றும் முத்திரைப் பதித்தவர்.

‘அமர்க்களம்’ என்ற படத்தில் அவருடன் இணைந்து நடித்த ஷாலினியை காதலித்து மணமுடித்தார்.

மூன்று முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகளையும்’, இரண்டு முறை ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளையும்’, மூன்று முறை ‘விஜய் விருதுகளையும்’, இரண்டு முறை ‘தமிழ்நாடு மாநில அரசு விருதுகள்’, எனப் பல்வேறு விருதுகளை வென்றுள்ள அவர், ஒரு கார் பந்தய வீரராகவும் அறியப்படுகிறார்.
இத்தகைய சிறப்புமிக்க ‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித் குமார் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ்த் திரையுலகில் அவர் ஆற்றிய சாதனைகள் என்றும் ரசிகர்கள் மத்தியில் நிலைத்திருக்கும் என்பது உண்மை.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: