மே மாதம் முதலாம் திகதி எரிபொருள் விலைகள் உயர்வடையும்?

0
593

எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி எரிபொருட்களுக்கான விலைகள் உயர்வடையும் என முன்னாள் அமைச்சரும், கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்…

அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்டுள்ள உடன்படிக்கை காரணமாக எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் எரிவாயு மற்றும் எரிபொருட்களுக்கான விலைகள் உயர்த்தப்படும்.

எரிபொருள் விலை தொடர்பிலான விலைப் பொறிமுறைமை ஒன்றை அரசாங்கம் அறிமுகம் செய்யவுள்ளது.

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் அடிப்படையில் இலங்கைக்கு ஜூன் மாதம் ஒரு தொகுதி கடன் வழங்கப்படவுள்ளது.

கடன் தொகையைப் பெற்றுக்கொள்ள முன்னதாக, நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது.

எதிர்வரும் மே மாதம் 7ம் திகதி மே தினக் கூட்டங்களின் போது அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் குறித்து மக்களை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: