மேலுதடு கருப்பா இருக்கா கருமையை போக்க என்ன செய்யலாம்!

0

உதட்டுக் கருமையைப் போக்க சற்று நாட்கள் பிடிக்கும், உடனடியாக பலனை எதிர்ப்பார்க்க வேண்டாம். அவ்வாறான நல்ல பலன் தரக் கூடிய குறிப்புகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

கேரட் ஜூஸ் :

கேரட் ஜூஸை எடுத்து ஒரு பஞ்சில் நனைத்து தினமும் உதட்டில் தடவிக் கொண்டு வந்தால் நல்ல பலன் தெரியும். வறட்சியான வெடித்த உதடுகள் வசீகரமாக மாறும். உதடு நல்ல இஞ்சிவப்பு நிறத்தில் மாறும்.

தக்காளி சாறு மற்றும் மஞ்சள் :

தக்காளி சாறு எடுத்து அதில் சிறிது மஞ்சள் கலந்து உதட்டில் தடவ வேண்டும். காய்ந்ததும் கழுவுங்கள். தினமும் செய்து வந்தால் உதடுகள் மீண்டும் சிவப்பாகி வருவதை காண்பீர்கள்.

பிரஷ் :

தினமும் காலை மற்றும் இரவில் டூத் பிரஷினால் சில நொடிகள் மசாஜ் செய்யுங்கள். இப்படி செய்தால் ரத்த ஓட்டம் தூண்டப் பெற்று இறந்த செல்கள் வேகமாக அழிகின்றன. இதனால் கருமையான நிறம் மாறி சிவப்பாக ஜொலிக்கின்றது.

உருளைக் கிழங்கு சாறு :

தினமும் இரவில் தூங்குவதற்கு முன் உருளைக் கிழங்கு சாற்றினை உதட்டில் தடவிக் கொள்ளுங்கள். உருளைக் கிழங்கின் ப்ளீச் செய்யும் குணம் உதட்டின் கருமையை போக்கும். நல்ல நிறத்தையும் தரும்

ரோஜா மற்றும் தேன் :

ரோஜா இதழ்களை நன்றாக கசக்கியதன் சாறு எடுத்து அதில் சிறிது தேன் கலந்து உதட்டில் தடவுங்கள். இது ரோஜா நிறத்தை உதட்டிற்கு தரும். உதடுகள் ஈரப்பதம் பெற்று மிருதுவாகும்.

கிளீசரின் :

கிளிசரினை ஒரு பஞ்சினால் நனைத்து உதட்டில் தடவுங்கள். மறு நாள் காலையில் கழுவி விடவும். கிளிசரின் கருமைக்கு காரணமான இறந்த செல்களை வேகமாக அழிக்கக் கூடியவை

பீட்ரூட் சாறு :

பீட்ரூட் துண்டை அல்லது சாற்றினை உதட்டில் பூசி காய்ந்த பின் கழுவினால் உதடுகள் மெருகேறும். சிவப்பு நிறம் பெறுவதோடு இயற்கை லிப்ஸ்டிக்காக் விளங்குகிறது.

ஆரஞ்சு தோல் :

ஆரஞ்சு தோலை வெயிலில் காய வைத்து பொடி செய்து அதனை தேன் கலந்து தினமும் உதட்டில் தடவி வாருங்கள். உதட்டின் கருமை வெகு விரைவில் மறைந்து விடும்.

தேன் மற்றும் பால் :

காய்ச்சாத பால் சிறிது எடுத்து அதில் தேன் கலந்து உதட்டில் தேயுங்கள். உதடுகள் மின்னும். கருப்பான உதடுகள் மெல்ல மெல்ல நிறம் பெறும். மிருதுவாகவும் மாறும். தினமும் அல்லது வாரத்தில் 4 நாட்கள் செய்து பாருங்கள்.

எலுமிச்சை மற்றும் புதினாசாறு :

புதினாவில் இலைகளில் இருந்து சாறு எடுத்து அதில் கால் பங்கு எலுமிச்சை சாறு கலந்து உதட்டில் தேயுங்கள். விரைவில் பலன் தரும் அருமையான குறிப்பு இது. உதட்டின் நிறம் மெல்ல பழைய இயற்கை நிறத்திற்கு பெறும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉடலில் அங்காங்கே தோன்றும் மருக்களை போக்க‌ இந்த சாறை தடவுங்க!
Next articleவீட்டில் தரையில் படிந்திருக்கும் கரைகளை எளிதாக அகற்ற முட்டை ஓடு!