மூதாட்டியின் காதிற்குள் வலை பின்னி வாழ்ந்து வந்த சிலந்தி!
சீனாவில் சிசுவான் மாகாணத்தில் உள்ள மின்யாங் மருத்துவமனைக்கு மூதாட்டி ஒருவர் கடும் காது வலியால் துடிப்பதாக கூறி மருத்துவமனைக்கு வந்துள்ளார். டாக்ரர் அவரது காதை பரிசோதித்த போது உள்ளே பந்துபோல் உருண்டைதெரிந்துள்ளது.
டாக்ரர் ஓடோஸ்கோபி மூலம் பரிசோதித்ததில், சிலந்தி ஒன்று வலை பின்னி வாழ்ந்து வந்துள்ளது இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த டாக்ரர் மருத்துவ உபகரணங்களை கொண்டு சிலந்தியை அகற்றியுள்ளார். தற்போது மூதாட்டி நன்றாக உள்ளார்.
By: Tamilpiththan
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: