மூட்டுவலிக்கு சீனர்கள் நாடுவது எதைத் தெரியுமா? வியப்பூட்டும் தகவல்!

0
1551

மனித உடல் என்பது எண்ணற்ற தசை, எலும்பு மற்றும் நரம்புகளால் பின்னிப் பிணையப்பட்ட ஒவ்வொன்றும் ஒவ்வொன்றோடு தொடர்புபட்ட ஒன்றாக உள்ளதனால் இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு பாதிப்பு ஏற்ப்பட்டால் கூட அது அதீத வலியினை ஏற்படுத்தி விடும். இவ்வாறாக மூட்டு வலி ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக மூட்டுகளின் செயல்பாடுகளுக்கு ஏற்ப வளைந்து கொடுக்கக் கூடிய மூட்டுகளுக்கு இடையே காணப்படும் எண்ணெய் திரவம் இல்லாமையினால் மூட்டு ஒன்றோடொன்று உரசுதல் காணப்படுகின்றது.

குறைந்தளவான உடல் உழைப்பு அல்லது நீண்ட நேரம் நின்று கொண்டேயிருக்கும் வேலையாக என்பன காரணமாக பெரும்பாலும் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே மூட்டு வலி அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதற்கான முக்கிய காரணங்களாக சத்தான உணவுகளை சாப்பிடாமல் துரித உணவுகளை அதிகளவில் எடுத்துக் கொள்தல் மற்றும் டெண்டிரைடிஸ், ஆர்த்ரைடீஸ், கார்டிலேஜ், கௌட், பேக்க்ரஸ் மற்றும் சிஸ்ட் போன்ற நோய்களும் காரணங்களாக இருக்கின்றன.

இதனை நீக்கக் கூடிய எளிய வீட்டு மருத்துவங்கள் பற்றி நோக்குவோம்.

இஞ்சி

ஏராளமான விட்டமின்களைத் தன்னகத்தே கொண்ட இஞ்சி எந்த வடிவிலும் பயன்படுத்தக் கூடிய ஒன்றாக காணப்படுவதுடன் மிக முக்கியமாக இஞ்சியை பயன்படுத்துவதற்கு முன்னதாக அதன் தோலை முழுமையாக நீக்குதல் அவசியமாகின்றது.

இங்கு குறிப்பிட வேண்டிய முக்கிய விடயம் யாதெனில் ஒரு நாளைக்கு நான்கு கிராமுக்கு மேல் இஞ்சி சாப்பிடுதல் கூடாது என்பதுடன், கர்பிணிப்பெண்கள், எடை குறைவாக இருப்பவர்கள், ரத்தக் கோளாறு இருப்பவர்கள், குடல் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் ஏதேனும் மருந்து மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டிருப்பவர்கள் அடிக்கடி இஞ்சி சாப்பிடுவதை தவிர்த்தல் வேண்டும்.

எலுமிச்சை

எலுமிச்சை தோலில் அதிகப்படியான ஆண்ட்டிசெப்டிக் ப்ராப்ர்டீஸ் உள்ளதனால் ஒரு ஜாடியில் எலுமிச்சைப் பழத்தோலை போட்டு அது மூழ்கும் அளவுக்கு ஆலிவ் ஆயில் ஊற்றி பின்னர் அதில் இயூக்கலிப்டஸ் இலைகள் சேர்த்து அதனை நன்கு இறுக்கமாக மூடி இரண்டு வாரங்கள் வரை அப்படியே வைத்து, இரண்டு வாரங்கள் கழிந்த பின்னர் அந்த எண்ணெயை வலி உள்ள மூட்டுகளில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.

ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்

கடல் உணவுகளில் அதிகப்படியான ஒமேகா 3 காணப்படுவதனால் Rheumatoid arthritis இருப்பவர்கள் தங்கள் உணவுகளில் ஒமேகா 3 சேர்த்துக் கொண்டால் சிறந்த பலன்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

வெங்காயம்

வெங்காயத்தில் இயற்கையாகவே ஆண்ட்டி இன்ஃப்லமேட்டரி துகள்கள் மற்றும் சல்ஃபர் காணப்படுவதனால் அவை உடலின் வலியை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.

இவற்றை விட, ஒரேயிடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதை தவிர்த்துவிட்டு சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்தல் மற்றும் யோகா செய்தல் என்பன அப்பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து பாதிப்பின் தீவிரத்தை குறைத்து விடும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: