ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படம் சர்கார். விஜய் நடிக்கும் இப்படத்தை முருகதாஸ் இயக்குகிறார். ஆனால் இப்படத்தின் கதை என்னுடையது என்று வருண் ராஜேந்திரன் என்ற உதவி இயக்குனர் புகார் செய்தார்.
பாக்யராஜ் சுமூகமாக பேசி முடிக்க முயற்சித்தார் ஆனால் பிடிவாதமாக என்னுடைய சொந்த கற்பனை தான் என்று முருகதாஸ் அடம்பிடித்தார்.
நான் கோர்ட்ல பாத்துக்கிறேன். நான் 10 மாசம் சுமந்த பிள்ளைக்கு வேற ஒருத்தன் அப்பானு இனிசியல் போடுவானானு வசனம் எல்லாம் பேசுனார்.
ஆனா கடைசில இன்னிக்கு வந்த தீர்ப்புல கதைக்கரு வருண்ராஜேந்திரனுடையது என சொல்லி படத்தில் பேர் போட ஒத்துக்கிட்டாங்க.
இதை முன்னாடியே செஞ்சிருந்தா இந்த அவமானம் எல்லாம் தேவையா. இப்போ அவன் அப்பானு ஒத்துக்குவாரானு கலாய்க்க ஆரம்பிச்சிட்டாங்க ரசிகர்கள்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: