மும்பையிலிருந்து சைக்கிள் பயணம். சொந்த ஊர் வந்ததும் என்ன நடந்தது தெரியுமா? நாட்டையே கலங்க வைத்த இளைஞர்.

0
405

மும்பையிலிருந்து சைக்கிள் பயணம்… சொந்த ஊர் வந்ததும் என்ன நடந்தது தெரியுமா? நாட்டையே கலங்க வைத்த இளைஞர்.

கொறோனா காரணமாக வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைக‌ளை சந்தித்து வருகின்றனா்.

இந்த வகையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையிழந்த 24 வயது இளைஞர் ஒருவர், மும்பையில் இருந்து ஒடிசா மாநிலத்தில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு, அதுவும் சைக்கிளில் பயணம் செய்துள்ளார்.

அவர் 1,800 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமாக கடந்துள்ளார். இந்த சம்பவம் தற்போது நாட்டையே கண் கலங்க வைத்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள படாசூர் என்ற சிறிய கிராமத்தை சேர்ந்த மகேஷ் ஜெனா என்ற இளைஞரே இவ்வாறு பயணம் செய்துள்ளார். இவர் மஹாரஷ்டிர மாநிலம் மும்பையில் கொத்தனாராக வேலை செய்து வந்தார். தற்போது ஊரடங்கு அமுலுக்கு வந்த சமயத்தில் மும்பையில் இருந்தார்.

அவர் வேலையை இழந்தினால் வீட்டு வாடகையை கொடுக்க முடியவில்லை அதனால் சொந்த ஊருக்கே சென்று விடலாம் என அவர் முடிவு செய்து ஏப்ரல் 2ம் தேதி பயணத்தை தொடங்கினார். ஒவ்வொரு நாளும் சுமாராக 10 முதல் 12 மணி நேரம் வரை சைக்கிள் ஓட்டுவார்.

அவரிடம் சில நூறு ரூபாய் மட்டுமே பணம் இருந்துள்ளது. போகும் வழியில் அவர் சந்தித்த பொதுமக்கள் மற்றும் போலீசார் அவருக்கு உணவு மற்றும் குடிநீர் போன்றவற்றை வழங்கி உதவி செய்துள்ளனர்.

ஒரு வழியாக கடந்த ஏப்ரல் 9ம் தேதி, மகேஷ் தனது சொந்த ஊரை சென்றடைந்தார். அங்கு அந்த மாவட்ட நிர்வாகத்தால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆகவே ஊரடங்கு உத்தரவினால் வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு, தற்போது இருக்கும் அந்தந்த மாநிலங்களின் அரசுகளின் உதவி கிடைத்தால் நன்று.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: