முதியவர் செய்த செயல்! ஓடும் ரயிலில் இருந்து தடுமாறி விழுந்த இளம்பெண்!

0
208

சமீப காலமாக ரயில் விபத்துகளில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இது யாருடைய தவறு என்று விவாதம் நடத்தி வருகிறோமே தவிர.. அதற்கான தீர்வு நம்மிடம் தான் உள்ளது என்பதை என்றும் உணரவில்லை.

சமீபத்தில் கூட சென்னை பரங்கிமலை பகுதியில் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கோர விபத்து ஒன்றில் குறைந்தது 5 பேர் பலியாகினர்.

இந்த விபத்தில், இளைஞர்கள் ரயில் வாசலில் தொங்கி பயணம் செய்ததால் தான் விபத்து ஏற்பட்டது என்ற கோணத்தில் தான் ஊடகத்தின் கண்களால் சித்தரிக்கப்பட்டது.

அப்படியிருக்கையில், பல உயிர்கள் போன நிலையிலும் இளைஞர்கள் இன்று ரயில் வாசலில் தொங்கி பயணம் செய்வதை நிறுத்திவிட்டார்களா என்று கேட்டால் இல்லை என்று தான் கூர வேண்டும்.

அப்படி இளைஞர்கள் தொங்கி பயணம் செய்தது போய் தற்போது இளம் பெண்களும் அவ்வாறு தொங்கி பயணம் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

குறித்த வீடியொவில் பாருங்கள்.. மும்பையில் ஒரு லோக்கல் ட்ரெயினில் நடந்த சம்பவம் தான் இது..

அதவாது, ஒரு இளம்பெண் ரயிலின் வாசலில் தொங்கி காற்று வாங்கியபடி காதில் ஹெட்செட்டை மாற்றி பாட்டு கேட்டுக் கொண்டு பயணம் செய்கிறார்.

திடீரென்று, எதிராக அடுத்த தண்டவாளத்தில் மற்றொரு ரயில் வேகமாக வருவதைப் பார்த்த அந்த இளம்பெண் பயத்தில் கீழே விழ..அங்கிருந்த ஒரு முதியவர் சட்டென்று யோசிக்காது பிடித்துவிட்டார்.

இதனால், அந்த இளம்பெண் எந்தவித காயமும் இல்லாமல் தப்பித்துள்ளார். சற்று யோசித்துப் பாருங்கள் அந்த முதியவர் பிடிக்கைவில்லையென்ரால் அந்த இளம்பெண்ணின் உயிர் இருந்திருக்குமா என்றால் சந்தேகமே..

இனியாவது, குடும்பத்தைப் பற்றியும், நம் உயிரைப் பற்றியும் யோசித்து பயணம் செய்வோம்…..

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: