முதல் கணவரால் கொல்லப்பட்ட பெண்…8 வருடங்களுக்கு பிறகு இரண்டாவது கணவருடன் வந்த அதிசயம்..!!

0
347

பாகிஸ்தானில் 8 வருடங்களுக்கு முன்னர் கணவரால் கொலை செய்யப்பட்டுவிட்டதாக கருதப்பட்ட பெண், தற்போது புதுக்கணவர் மற்றும் 6 குழந்தைகளுடன் திரும்பி வந்துள்ளது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாகிஸ்தானில் Phalayan கிராமத்தை சேர்ந்தவர் Asma Bibi (30).இவர் 2009 ஆம் ஆண்டு Ibrar Ahmed என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

திருமணம் முடிந்து ஒரு வருடமே ஆகியிருந்த நிலையில், 2010 ஆம் ஆண்டு இவரை காணவில்லை. தங்களது மகளை, அவரது கணவர் கொலை செய்துவிட்டார் என அஸ்மாவின் பெற்றோர் பொலிசில் புகார் அளித்ததையடுத்து, அகமத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன்பின்னர், கொடுத்த வழக்கை அஸ்மாவின் பெற்றோர் திரும்ப பெற்றுக்கொண்டதால், அபராதம் செலுத்திவிட்டு அகமத் சிறையில் இருந்து வெளியேவந்தார்.இந்நிலையில், 8 ஆண்டுகளுக்கு பின்னர் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது புதுக்கணவர் மற்றும் 6 குழந்தைகளுன் திரும்பி வந்துள்ளார்.

இதுவரை இவர் எங்கிருந்தார் என்பது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் உண்மை தகவல் அம்பலமாகியுள்ளது.திருமணத்திற்கு முன்னர் அஸ்மா, நசீர் என்ற நபரை காதலித்து வந்துள்ளார். ஆனால், இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், அஸ்மாவை, அகமத்துக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

திருமணம் வாழ்க்கையில் விருப்பம் இல்லாமல் இருந்த அஸ்மா, தனது காதலன் நசீரோடு துபாய்க்கு ஓடியுள்ளார். அங்கு இத்தனை ஆண்டுகள் அவருடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு 6 குழந்தைகளும் பிறந்துள்ளது.

தற்போது, முதல் கணவனை விவாகரத்து செய்யாமல் இண்டாவது திருமணம் செய்துகொண்டது சட்டப்படி குற்றம் என்பதால், அதனை எதிர்த்து அஸ்மாவின் முதல் கணவர் அகமத் வழக்கு தொடர்ந்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: