முகத்தை விட தலைக்கு அழகுப்படுத்திக்கொள்வது என்பது இன்றைக்கு அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. விதவிதமான வண்ணங்களில் முடியை கலரிங் செய்து கொள்வது இன்றைய டாப் ட்ரெண்ட்.
கலரிங் செய்து கொள்வதற்கு முன்னால் உங்களுக்கு அது ஏற்றதா இல்லையா என சின்ன டெஸ்ட் செய்து பார்த்து போட்டுக்கொண்டாலும் இதனால் பின்னால் ஏற்படும் விளைவுகள் நிறைய… பல பெண்கள் இப்போது தங்களது முடியை ஸ்ட்ரெய்டனிங் செய்து கொள்ள விரும்பிகின்றனர் இதனாலும் முடி நிறைய பாதிப்படையும்.
அதிக வறட்சி
முடியை ஸ்ட்ரெய்டனிங் செய்வதால் வரும் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது முடிக்கு அதிக வறட்சி ஏற்படுவது. முடிக்கு தேவையான ஈரப்பதத்தை ஸ்ட்ரெய்டனிங் செய்யும் போது போடுகிற கெமிக்கல்களால் உறிஞ்சப்படும். இதனால் முடி அதிகமாக கொட்டும். அதோடு முடிக்கான போஷாக்கும் குறைவதால் முடியின் தன்மை பாதிக்கும் .
அலர்ஜி
ஸ்ட்ரெய்டனிங் செய்யும் போது அதிக கெமிக்கல்களை பயன்படுத்துவாரக்ள் இதனால் சிலருக்கு தலையில் அரிப்பு ஏற்படும். சிலருக்கு கண்களில் கூட அரிப்பு ஏற்படும். உடனடியாக அதனை மாற்றவும் முடியாது என்பதால் ஸ்ட்ரெய்டனிங் செய்வதற்கு முன்னால் நன்றாக யோசித்து முடிவெடுங்கள்.
மாறாது
ஒரு முறை ஸ்ட்ரெய்டனிங் செய்துவிட்டால் நீண்ட காலம் அதனை மாற்ற முடியாது. வேறு ஹேர்ஸ்டைல் செய்து கொள்ள நினைத்தாலும் முடியாது. இவை எல்லாவற்றையும் விட இதனை பராமரிப்பது கடினம்.
முடி கொட்டும்
ஸ்ட்ரைட்னிங் செய்யும் போது நிறைய முடி கொட்டும். அதன் பின்னர், அதில் பயன்படுத்தியிருக்கும் கெமிக்கல்களால் முடி கொட்டுவது தொடர்ந்து கொண்டேயிருக்கும். இயற்கையாக கிடைக்க வேண்டிய சத்துக்கள் முடிக்கு இல்லாது செயற்கையாக நாம் செலுத்திய கெமிக்கல்களால் வலுவிழந்து முடி கொட்டுவது அதிகரிக்கும்.
முடி உடைதல்
நீளமான முடி கெமிக்கல்கள் அதிகம் பூசப்படுவதால் முடி உடைவது தொடரும். பல கெமிக்கல்களை தடவி அதிக டெம்ப்பரேச்சர் கொண்டு ஹீட் செய்யப்படும் போது, அது எளிதாக உடைகிறது. முடியின் ஆரோக்கியம் முழுதாக கெட்டுவிடும்.
உடலுக்கும் பாதிப்பு
ஸ்ட்ரெய்டனிங் செய்வதன் மிக முக்கிய பிரச்சனை ஸ்ட்ரயிட் செய்யும் போது வெளிவரும் கேஸ். பார்மல்டீஹைட் கேஸ் சில மருந்துகளையோ,அல்லது உணவு வகைகளையோ சூடாக்கும் போது, ஐயர்னிங் செய்யும் போது, ட்ரையர் போடும் போது கூட ஏற்படும். இவை ஸ்ட்ரைட்னிங் செய்யும் போது அதிகமாக வருவது தான் பிரச்சனை. தொடர்ந்து இதனை சுவாசிக்கும் போது சரும அலர்ஜியில் தொடங்கி உள்ளுருப்புக்கள் வரை பாதிக்கும்.
ஹைலைட்
ஹேர் கலரிங்கின் ஒரு வகை ஹைலைட் முடியின் ஒரு பகுதியை மட்டும் நிறமேற்றி ஹைலைட் செய்வது. இது முடியின் ஆரோக்கியத்தை கெடுக்ககூடியது. முடியின் பாதிக்கு ஒரு நிறமும் மீதிக்கு இன்னொரு நிறமும் அடிக்கக்கூடாது. இரண்டு வெவ்வேறு நிறங்கள் பார்க்க அழகாக தெரிந்தாலும் இதனால் ஏற்படும் விளைவுகள் அதிகம்.
அதிக நாட்கள்
விளம்பர யுத்தியாக இதைக் கொண்டு கலரிங் செய்தால் நீண்ட நாட்கள் இருக்கும் என்று விளம்பரம் செய்யப்படுகிறது. அப்படி விளம்பரம் செய்யப்படும் கலரிங்கை வாங்காதீர்கள். நீண்ட நாட்கள் இருக்க அதிகப்படியான கெமில்களை சேர்த்திருப்பார்கள் அது உங்கள் முடியோடு உங்கள் தலையையும் பாதிக்கும்.