Home Patti Vaithiyam முடக்கு வாதத்தை குணப்படுத்த இவ்வளவும் போதும்!

முடக்கு வாதத்தை குணப்படுத்த இவ்வளவும் போதும்!

0
4333

முடக்கு வாதத்தை குணப்படுத்த இவ்வளவும் போதும்!

மூட்டிலுள்ள இணைப்புதிசுக்கள் மற்றும் சவ்வுகளின் மீது யூரிக் அமிலம் உப்பாக படிவதனால் ஏற்படக் கூடிய வீக்கத்தின் மூலம் உருவாகும் முடக்கு வாதமானது மிகுந்த வலியை ஏற்படுத்துவதுடன், இணைப்புகளில் வீக்கம் மற்றும் பாதிப்புகளையும் ஏற்படுத்தும். இவ்வாறாக ஏற்படக் கூடிய வலிகளை போக்கவும், யூரிக் அமில உப்புககளை கரைக்கவும் இயற்கையாகவே வலிகளையும், பிரச்சனைகளையும் குணப்படுத்தும் ஆற்றல் நாம் உண்ணும் உணவுகளிற்கு உண்டு. அந்தவகையில் எத்தகைய உணவுகள் முடக்குவாதத்தை குணப்படுத்துவதற்கு பயன்படுத்தலாம் என்பதனை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

செர்ரி :

தினமும் அரை கப் அல்லது 10-12 செர்ரி பழங்கள் சாப்பிட்டு வரும் போது முடக்கு வாதம் குனப்படுத்தப்படுவதோடு மட்டுமல்லாமல் ஆர்த்ரைடிஸ், முடக்கு வாதம் மற்றும் கீல் வாதம் ஆகியன வராமலும் தடுக்கும் என சமீப ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கின்றது.

கொத்துமல்லி தழை :

கொத்துமல்லி தழையை நீரில் போட்டு அப்படியே குடித்து வருதல் அல்லது கொத்துமல்லி விதையை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரும் போது, அது யூரிக் அமிலத்தை குறைவடையச் செய்து, இரைப்பை பாதிப்புகளை சீராக்குவதுடன், மூட்டு வலியையும் நீக்குகின்றது.

விளக்கெண்ணெய் :

விளக்கெண்ணெயை லேசாக சூடுபடுத்தி மசாஜ் செய்து வரும் போது வலி மற்றும் எரிச்சல் என்பன கட்டுப்படுத்தப்படும்.

வெந்தயம் :

முதல் நாள் இரவில் ஒரு கரண்டி அளவு வெந்தயத்தை எடுத்து சிறிது நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த நீரை குடித்து அதிலுள்ள வெந்தயத்தை மென்று சாப்பிடும் போது, வெந்தயம் உள் மற்றும் வெளி வீக்கத்தை குறைப்பதுடன், பாதிக்கப்பட்ட இடங்களில் தோன்றும் வலியினையும் குறைக்கும்.

ஓமம் மற்றும் இஞ்சி :

அரை கரண்டி ஓமம்; மற்றும் ஒரு துண்டு இஞ்சி என்பனவற்றை தட்டி அதனை ஒரு கப் நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து, அதனை வடிக்கட்டி காலை அரை கப் மற்றும் மாலை அரை கப் என்று குடித்து வரும் போது வலி, வீக்கத்தை மட்டுமல்லாது, யூரிக் அமிலத்தின் சுரப்பும் கட்டுப்படுத்தப்படும்.

பூண்டு :

இரண்டு பூண்டு பற்களை நல்லெண்ணெய் அல்லது நெய்யில் வறுத்து தினமும் சாப்பிட்டு வரும் போது முடக்கு வாதத்தின் பாதிப்பினை வேரிலிருந்து குணப்படுத்த முடியும்.

By: Tamilpiththan

Previous articleபாரிச வாயு எனும் பக்கவாதத்தை குணப்படுத்தும் அற்புத சதாப்பிலை மூலிகை குடிநீர்!
Next articleUllaallaa Song Lyrics tamil from Petta Song Lyrics