மீண்டும் கொரோனா அதிகரிப்பு! கொரோனா வலையத்திற்குள் 8 மாநிலங்கள்! முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

0
269

மீண்டும் கொரோனா அதிகரிப்பு! கொரோனா வலையத்திற்குள் 8 மாநிலங்கள்! முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 16,838- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 13,819- பேர் ஒரே நாளில் குணம் அடைந்துள்ள நிலையில், நேற்று மட்டும் 113- பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப், குஜராத், டெல்லி, அரியானா, மத்திய பிரதேசம் மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளதால் கொரோனா பரவல் வலையத்திற்குள் இந்த மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், இங்கிலாந்து, பிரேசில், தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உருவான உருமாறிய கொரோனாவும், இந்தியாவில் தற்போது பரவி வருகிறது என்பது கூடுதல் பயத்தை கொடுத்துள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: