ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான முறுகல் நிலை தீவிரம் அடைந்துள்ளது.
இலங்கையின் சமகால பிரதமர் யார் என்பது தொடர்பான அதிகார போட்டியால் கொழும்பு அரசியல் பெரும் பதற்ற நிலையை அடைத்துள்ளது.
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்திற்கு அமைய எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவுகளும் பலரை பீதியில் ஆழ்த்தியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்பிற்கு பிரதமர் பதவி கிடைக்கும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபித்தாலும் பிரதமர் பதவியை மீண்டும் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப் போவதில்லை என ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற கட்சி தொடர்பான கலந்துரையாடல் ஒன்றின் கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாகவே நாடாளுமன்றத்தை கலைக்கும் திட்டத்திற்கு ஜனாதிபதி வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
அநேகமாக அடுத்து வரும் நாட்களில் நாடாளுமன்றத்தை கலைக்கும் தீர்மானத்தில் ஜனாதிபதி உள்ளதாக தெரியவந்துள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிய வருகிறது.