மார்ப்புப் பகுதியில் சேர்ந்திருக்கும் கொழுப்பினை குறைக்க என்ன செய்ய வேண்டும் இவற்றை செய்தால் போதும்!

0
2525

இன்றைய நவநாகரிக யுகத்திற்கு ஏற்ப நம்முடைய உணவுப்பழக்கத்தை மட்டும் மாற்றிக் கொண்டால் போதாது. அதனை கடைபிடிக்க வசதியாக அனைத்தையுமே மாற்றிக் கொள்ள வேண்டும். ஆம், மாறி வரும் உணவு பழக்கம், உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால், வயதுக்கு மீறிய உடல்பருமனோடு இருக்கும் இளம்பருவத்தினர் அவர்களுக்குப் பிடித்த ஆடை அணிவதில் பல்வேறு சிரமங்களை சந்திக்கிறார்கள்.

நாம் சாப்பிடும் துரித உணவுகளினால் கொலஸ்ட்ரால் அதிகரித்து உடலில் பல்வேறுப் பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பது தனிக்கதை ஆனால் கொழுப்பு அதிகமாக உடலில் சேர்ந்து விடும்.

பெரும்பாலும் கொழுப்பு வயிற்றுப் பகுதி இடுப்புப் பகுதியில் தான் அதிகமாக சேருகிறது. இதைத்தவிர மார்பு, இடுப்பு, தொடைப்பகுதி என மற்ற பகுதிகளிலும் பரவுகிறது. இப்போது மார்ப்புப் பகுதியில் சேர்ந்திருக்கும் கொழுப்பினை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள் .

இஞ்சி :
இந்தியா மற்றும் சீன உணவுகளில் சேர்க்கப்படுகிற ஒரு பண்டம் இஞ்சி. இஞ்சியில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கிறது. இதிலிருக்கும் தாதுக்கள் உணவு செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. கொழுப்பைக் கரைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. தினமும் இஞ்சிச் சாறு குடிப்பதினால் நல்ல பலன் கிடைக்கும். தினமும் உணவுகளில் இஞ்சியை சேர்த்துக் கொள்ளுங்கள் .

க்ரீன் டீ :
நமது உடலில் உள்ள செல்களிலும் ஆக்சிடேஷன் நடக்கும். நீரிழிவு, கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கும், வெயில், சுற்றுச்சூழல் மாசின் பாதிப்புகளாலும், புகை, குடிப்பழக்கம், துரித உணவுப் பழக்கம் உள்ளவர்களுக்கும் உடலின் செல்களில் ஆக்சிடேஷன் அதிகமாகும்.

அதை ‘ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்’ என்கிறோம். அதன் விளைவாக ‘ரியாக்டிவ் ஆக்சிடேஷன் ஸ்பீசிஸ்’ என்கிற ஒரு ரசாயனம் சுரக்கும். அது மனிதர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.

நீரிழிவையும் கொலஸ்ட்ராலையும் ரத்த அழுத்தத்தையும் அதிகப்படுத்துவதுடன் சீக்கிரமே முதுமையையும் கொடுத்துவிடும். இவ்வளவு மோசமான விளைவு களைக் கொடுக்கக்கூடிய இந்தப் பிரச்னைக்கு ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் என்பவை அவசியம்.

க்ரீன் டீயில் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்து காணப்படுகிறது.

ஆளி விதை :
ஆளி விதைகளில் அதிகப்படியான புரதச்சத்து நிறைந்திருக்கிறது.இது நம் உடலின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை நிற்கிறது. இதனை ஊற வைத்த நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதினால் நல்ல பலன் கிடைத்திடும்.

அதோடு சிறுநீரகப்பிரச்சனை,மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகளையும் தீர்க்கிறது.

மஞ்சள் :
மஞ்சளில் இருக்கும் மினரல்ஸ்கள் அதிகப்படியான கொழுப்பினை கரைக்க கூடியது.இதனால் தொப்பை ஏற்படுவது தவிர்க்கப்படும் .வெள்ளை அடிபோஸ் என்ற திசுவில் தான் அதிகப்படியான கொழுப்பு படிகிறது.

மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்ற தாது இந்த வெள்ளை அடிபோஸில் தங்கியிருக்கும் கொழுப்பினை கரைக்க உதவுகிறது.

அதோடு உடலில் மற்ற பாகங்களில் சேர்ந்திருக்கும் கொழுப்பினையும் கரைக்கச் செய்கிறது.

முட்டையின் வெள்ளைக்கரு :
உங்கள் உடல் எடையை கட்டுப்படுத்த உதவும் முட்டை, அன்றைய நாள் சிறப்பாக செல்ல அளவுக்கு அதிகமான ஆற்றல் திறனையும் அளிக்கும். முட்டையின் வெள்ளை கருவில் கலோரிகள் குறைவாக இருக்கிறது. புரதச்சத்து நிறைந்த வெள்ளைக்கரு தினமும் எடுத்துக் கொள்ளலாம்.

மீன் எண்ணெய் :
நம் உடலுக்கு மிகவும் அவசியமான, அதேநேரம் இயற்கையாக எளிதில் கிடைக்காத பல வகைச் சத்துக்கள், திமிங்கலம் போன்ற மிகப்பெரிய மீன்களில் இருக்கின்றன. இந்த மீன்களை நம்மால் சமைத்துச் சாப்பிட முடியாது.

இந்த மீன்களின் கல்லீரலில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய், பல கட்ட சுத்திகரிப்புக்குப் பிறகு, கேப்ஸ்யூல்களில் அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. ‘காட் லிவர் ஆயில்’ (Cod liver oil) என்ற பெயரில் மீன் எண்ணெய் மாத்திரைகள் அனைத்து மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலம், வைட்டமின் டி மற்றும் ஏ உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் மீன் எண்ணெயில் நிறைவாக உள்ளன. இது உடலுக்குத் தேவையான நல்ல கொலஸ்ட்ரால். இ.பி.ஏ மற்றும் டி.ஹெச்.ஏ எனப்படும் அமிலங்களும் இந்த மீன் எண்ணெயில் உள்ளன.

வெந்தயம் :
ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்த வெந்தயம் கொழுப்பை குறைக்கும். வெந்தயத்தில் சுண்ணாம்புச் சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம்,பாஸ்பரஸ் உட்பட பல்வேறு சத்த்க்கள் நிறைந்திருக்கின்றன.

இதனை இரவில் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரைக் குடித்து வந்தாலோ அல்லது காலையில் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடித்து வந்தாலோ, செரிமான பிரச்சனைகள், அல்சர் போன்றவை நீங்கும்.

சிட்ரஸ் பழங்கள் :
சிட்ரஸ் அமிலம் நிறைந்த பழங்களை தினமும் உட்கொள்ளுங்கள். இதில் இருக்கும் விட்டமின் சி கொழுப்பை கரைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது.

பச்சைக் காய்கறிகள் :
பல ஐ.டி கம்பெனிகளில் ‘கிரீன் ரூம்’ என்றிருக்கும். மிகவும் ஸ்ட்ரெஸ்ஸாக இருப்பவர்கள் சிறிது நேரம் பச்சைக் கலரை பார்த்தால் மனது ரிலாக்ஸாகும் என்பதற்காக இந்த ரூம்.

அதுபோலதான் பச்சை நிறக் காய்கறிகளும்.. கீரை வகைகள், ப்ராக்கோலி, அவகாடோ, வெண்டை ஆகியவற்றில் அதிகமாக ஃபோலிக் ஆசிட் (வைட்டமின் பி9) இருக்கிறது. இது மூளையை புத்துணர்ச்சியாக வைத்து உற்சாகமாகச் செயல்பட உதவுகிறது. நீங்கள் ‘ஷார்ட் டெம்பர்’ பேர்வழி என்றால் உங்களது டென்ஷனை குறைக்க இவை உதவும்.

உணவுப்பழக்கம் :
ஒரே நேரத்தில் மொத்தமாக சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். அதே சமயம் பிரித்து சிறிது சிறிதாக சாப்பிடுங்கள். அதிக கொழுப்புள்ள உணவு வகைகளை தவிர்த்திட வேண்டும். குளிர்பானங்கள்,மதுப்பழக்கம் ஆகியவற்றை அறவே ஒழித்திடுங்கள்.

அதிகமாக சர்க்கரை மற்றும் உப்பு சேர்ப்பதை குறைத்திடுங்கள். இவை எல்லாவற்றையும் விட தினமும் உடற்பயிற்சி அவசியம். ஒரு நாளைக்கு அரைமணிநேரமாவது உடலுழைப்பு செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளூங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபுற்றுநோய் மற்றும் இதய கோளாறுகளில் இருந்து தப்பிக்க உதவும் காளான்!
Next articleரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாடா! மருந்து மாத்திரை இல்லாமல் சரி செய்வது எப்படி!