மருத்துவர் சைமனின் இறுதிச் சடங்கிற்கு இடையூறு- கார்த்தி வருத்தம்!

0

மருத்துவர் சைமனின் இறுதிச் சடங்கிற்கு இடையூறு- கார்த்தி வருத்தம்!

மருத்துவர் சைமனின் இறுதிச் சடங்கிற்கு இடையூறு செய்தது தமிழ் சமூகத்திற்கே தலைகுனிவு என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இறந்த டாக்டர் சைமன் உடலை அடக்கம் பண்ண விடாமல் பலர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

சென்னை அமைந்தகரையில் வசித்தவர் பிரபல நரம்பியல் மருத்துவர் சைமன் ஹெர்குலஸ். இவர் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய, முதலில் கீழ்ப்பாக்கம் கல்லறைப் பகுதிக்குக் கொண்டு சென்றனர். அப்போது, அங்கு 90க்கும் மேற்பட்டவர்கள், அவரது உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து கற்களால் எறிந்து ‌ போராட்டம் நடத்தினர்.பின்னர் டாக்டர் சைமன் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தனர்.

இதனைக் கண்டித்து நடிகர் கார்த்தி டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ‘டாக்டர் சைமன் இறுதிச் சடங்குக்கு இடையூறு செய்தது தமிழ் சமூகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இனியும் இதுபோன்ற தவறு நிகழாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும் சைமன் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் அனைவரின் சார்பாக என் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்’. என கூறியுள்ளார்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகிரீன் கார்டு நிறுத்தி வைப்பு-அதிபர் டொனால் டிரம்ப்!
Next articleதனது ரசிகரின் கேள்விக்கு வீட்டின் புகைப்படத்தை அனுப்பிய சித்ரா! வாயை பிளந்த ரசிகர்கள்.