உங்கள் வாழ்க்கை நரகமாக காரணம் நீங்கள் சாதாரணமென நினைத்து செய்யும் இந்த செயல்கள்தான்!

0

நமது உலகம் இதுவரை மூன்று யுகங்களை கடந்து நான்காவது யுகத்தில் இருக்கிறது. சத்யுகம், தீர்த்தயுகம், துவாபரயுகம் என மூன்றையும் கடந்து நமது உலகம் இப்பொழுது கலியுகத்தில் இருக்கிறது. ஒவ்வொரு யுகத்திலும் மனிதர்களின் குணம், விருப்பங்கள், நடத்தை என அனைத்திலும் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டு கொண்டே வருகிறது. சத்யுகத்தில் உறவுகளுக்கு கொடுத்த முக்கியத்துவமும், மனதிற்கு நேர்மையாக இருப்பதும் முக்கியமானதாக இருந்தது.

கலியுகமான இன்று நாம் சாதாரணமென நினைத்து செய்யும் செயல்களில் பல சத்யுகத்தில் பெரிய பாவங்களாக கருதப்பட்டு வந்தது. ஏனெனில் கலியுகத்தில் மனிதர்கள் உறவுகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் என்பது மிகவும் குறைந்து விட்டது. நாம் செய்யும் பாவச்செயல்கள்தான் நம் உலகத்தின் முடிவுக்கு காரணமாக இருக்க போகிறது என்று நமது வேதங்கள் சொல்கிறது. கங்கை மைந்தர் பீஷ்மரும் அதைத்தான் தர்மருக்கு கூறினார். இந்த பதிவில் கலியுகத்தின் அழிவிற்கு காரணமாக இருக்கப்போகும் பாவங்கள் என்ன என்று பார்க்கலாம்.

சத்யுகம் முடிந்த பிறகு தீர்த்தயுகம் தொடங்கியது. இந்த யுகத்தில்தான் மகாவிஷ்ணு பூமியில் இராமபிரானாக பிறப்பெடுத்தார். இந்த யுகத்தில்தான் மனித உறவுகள் நேர்மையான செயல்களையும், உண்மையையும் மிஞ்சி செயல்பட தொடங்கியது. துவாபர யுகத்தில் உறவுகள் மற்றும் தனிமனித கண்ணியம் படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. பணம், அதிகாரம் மற்றும் பதவி போன்றவற்றிற்கு மனித உறவுகளை விட அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

கலியுகம் தொடங்கிய பின் பணம் மற்றும் அதிகாரத்திற்காக அனைத்து மனித இயல்புகளையும் மனிதர்கள் மீற தொடங்கிவிட்டார்கள். துரோகம், சதி, ஏமாற்றுதல் என அனைத்தையும் தங்கள் கையில் எடுக்க மனிதர்கள் தொடங்கிவிட்டார்கள். குறைந்தபட்சம் தனக்கு தானே உண்மையாக இருப்பதை கூட மனிதர்கள் மறந்துவிட்டார்கள். கலியுகத்தை அழிக்கும் பாவங்கள் என்னென்ன என்று பீஷ்மர் தர்மனிடம் கூறியதை மேற்கொண்டு பார்க்கலாம். இந்த பாவங்கள் நம் உடலால், மனதால் மற்றும் வார்த்தைகளால் செய்பவையாகும்.

நாம் உடலால் செய்யும் முதல் பாவம் வன்முறைதான். மற்ற பாவங்களை காட்டிலும் மிகவும் கொடூரமான பாவம் என்றால் அது இதுதான். வேண்டுமென்றே உயிருள்ள பொருட்கள் மீது செய்யும் அனைத்து வன்முறையும் உங்களின் பாவங்களிலேயே சேரும்.

உடலால் செய்யும் இரண்டாவது பாவம் திருட்டு ஆகும். சட்டவிரோதமாக மற்றவரின் பணம் மற்றும் சொத்தை அபகரிப்பது போன்றவை பாவச்செயல்கள்தான். உங்களுக்காக மற்றவர்கள் திருடினாலும் அது உங்களின் பாவத்திலேயே சேரும்.

முறைகேடுகள் என்பது கலியுகத்தில் அதிகம் நடக்கும் ஒரு பாவச்செயலாகும். நம்புபவர்களை ஏமாற்றுவது, உறவுகளுக்குள் ஏமாற்றுவது, பொய் வாக்குறுதிகள் கொடுப்பது என முறைகேடுகள் நம்மை சுற்றி தினமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

நாம் மற்றவர்களிடம் பேசும் விதம்தான் நம் ஆளுமையின் உண்மையான பிரதிபலிப்பாகும். தவறான உடல்மொழி உங்கள் உடல் பாவங்களின் கீழ் வருகிறது. எப்பொழுதும் அன்புடன் பேசுவதுதான் சிறந்தது. உங்களின் உடல்மொழி உங்களின் எண்ணங்களையும், வளர்ப்பையும் வெளிப்படுத்தும்.

விஷயங்களை ஆராயாமல் அறிவின்றி பேசுவது கூட ஒருவிதத்தில் பாவம்தான். மற்றவர்களுடன் விவாதிக்கும் முன் அதைப்பற்றி நீங்கள் முழுமையாக தெரிந்து கொண்டு அதன்பின் விவாதத்தில் ஈடுப்படவும்.

மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளபடி வயதில் மூத்தவர்களை அவமதிப்பது என்பது மரணத்திற்கு சமமானதாகும். ஆனால் கலியுகத்தில் இது சாதாரணமாக நிகழும் ஒரு செயலாக மாறிவிட்டது. பீஷ்மரை அவமதித்த துரியோதனின் நிலைமை என்னவாயிற்று என்பதை நாம் நாகு அறிவோம். அதே நிலைதான் வயதில் மூத்தவர்களை அவமதிக்கும் அனைவருக்கும்.

பொய் கூறுவது என்பது உங்களுடைய குணத்தை மட்டும் காட்டுவதில்லை அதனுடன் உங்களுக்கு பிரச்சினைகளையும் சேர்த்தே ஏற்படுத்தும். பொய்கள் கூறுவது உங்கள் ஆன்மாவை காயப்படுத்தும் எள்ளலும் உங்களை நரகத்திற்கு அழைத்து செல்லவும் வழிவகுக்கும்.

வேண்டுமென்ற ஒருவரை கடுஞ்சொற்களால் காயப்படுத்துவதும் பாவம்தான். மற்றவர்களை பற்றிய தவறான விஷயங்களை மட்டும் சிந்திப்பதே தவறான செயல்தான். மனரீதியாக காயப்படுத்துவது என்பது உடல்ரீதியாக காயப்படுத்துவதை விட கொடுமையானது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஒருவர் இறந்தபின் ஆத்மா தன்னை நினைத்து அழுபவர்களை எந்த இடத்திலிருந்து பார்க்கும்? பின் எங்கே செல்லும்?
Next articleகனவுகள் உங்களுக்கு கூற வரும் எச்சரிக்கைகள் என்னென்ன தெரியுமா !