மட்டக்களப்பு – தாளங்குடாவில் தூக்கிட்டு ஆசிரியர் தற்கொலை! காதல் விவகாரத்தால்!

0
317

மட்டக்களப்பு – தாளங்குடா ஆசிரியர் பயிற்சி கலாசாலை விடுதியில் ஆசிரியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைதீவு, கொத்தனி பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய எம். பிரதீப் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆசிரியர் விடுதிக்கு சென்று அங்குள்ள மின்சார விசிறியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதேவேளை, காதல் பிரச்சினையினால் குறித்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: