மஞ்சள் காமாலை வருவதற்கு இதுதான் மிக முக்கிய காரணம்! அனைவரும் அறிந்து கொள்ளுங்க!

0
605

வைரஸ் தாக்குதலால் ஏற்படுவது மஞ்சள் காமாலை. இது பரவக் கூடியது.

சுகாதார மற்ற தண்ணீர் இந்நோய் பரவுவதற்கு காரணம். இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

மஞ்சள் காமாலை வருவதற்கு மிக முக்கிய காரணம் தண்ணீர்
மஞ்சள் காமாலை தாக்குதலுக்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று வைரஸ் தாக்குதலால் ஏற்படும் மஞ்சள் காமாலை. இது பரவக் கூடியது. சுகாதார மற்ற தண்ணீர் இந்நோய் பரவுவதற்கு காரணம். தனிநபர் சுகாதார தன்மை, உணவு, கழிவுப் பொருள்களின் பாதிப்பு இவற்றினால் குடிக்கும் நீரில் அசுத்தம் ஏற்படுகின்றது.

சுகாதாரம் மிக மிக அவசியம். வைரஸ் பாதிப்பால் ஏற்படும் மஞ்சள் காமாலை 6 வாரங்களுக்குள் 99 சதவீதம் தானே இறங்கும். எளிதில் செரிக்க கூடிய உணவு, சுத்தமான நீர், சுகாதாரம், ஓய்வு இவையே பாதிப்பு ஏற்பட்டவருக்கு அவசியம் ஆகின்றது. சிலருக்கே கூடுதல் கவனம் மருத்துவரால் தேவைப்படுகின்றது.

ஆக சுத்தமான நீர், சுகாதாரமான பழக்கங்கள் (உ.ம்) கைகளை சோப்பு கொண்டு நன்கு சுத்தம் செய்வது, சுகாதார உணவு இவைகள் கோடையில் மஞ்சள் காமாலை பாதிப்பு இன்றி உங்களை காக்கும்.

இது பொதுவான முக்கியமான தகவலாக மஞ்சள் காமாலையைப் பற்றி இருந்தாலும் மேலும் இந்நோயினைப் பற்றி அறிவோம்.

மஞ்சள் காமாலை கல்லீரல் பாதிப்பினை கூறுவது. சருமம், கண் விழி இவை மஞ்சள் நிறமாக இருக்கும். பித்த நீரில் பிலிரூபின் என்ற பொருள் அதிகரிப்பதால் இந்த நிற மாற்றம் ஏற்படுகின்றது. பித்தநீர் உணவு செரிமானத்திற்கு அவசியமான ஒன்று. இதன் உற்பத்தி பொதுவில் நிரந்தரமாக இருக்கும்.
பொதுவில் மூன்று வகையான மஞ்சள் காமாலை தாக்குதலை நாம் பார்க்க முடியும்.

அதிக சிகப்பு ரத்த அணுக்கள் அழிந்து, ரத்த சோகை ஏற்பட்டு பிலிரூபின் அதிகமாக காணப்படுவது.

பித்த நீர் வரும் பாதையில் ஏற்படும் அடைப்பால் ஏற்படுவது, பித்த நீர் குழாயில் கல் அடைப்பு.
கல்லீரல் திசுக்கள் வைரஸ் தாக்குதல் அல்ல, சில வகை மருந்துகளின் நஞ்சினால் பாதிக்கப்படுவது. மஞ்சள் காமாலையின் அறிகுறிகள் கீழே.

மிக அதிக சோர்வு

தலைவலி

ஜுரம்

பசியின்மை

கடும் மலச்சிக்கல்

வயிற்றுப் பிரட்டல்

உடல், கண், நாக்கு இவற்றில் மஞ்சள் நிறம்

சிறு நீரில் மஞ்சள்

ஆகியவை இருக்கும்.

சிலருக்கு கடும் உடல் அரிப்பு இருக்கும். மஞ்சள் காமாலை என்றாலே கல்லீரல் பாதிப்பு என்றுதான் பார்க்க வேண்டும். வைரஸ் பிரிவில் மட்டும் இது எளிதாய் பரவக் கூடியது. மேலும் சில வகை ரத்த சோகைகளாலும், டைபாய்ட், மலேரியா, டிபி பாதிப்புகளாலும் மஞ்சள் காமாலை ஏற்படும் வாய்ப்பு உண்டு.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசொரியாசிஸ், படை, சொறி, அரிப்பு, சரும வறட்சி என பல நோய்களுக்கு நோய்களுக்குச் சிறந்த சிகிச்சை! வாழை இலைக் குளியல்!
Next articleஇன்றைய ராசிப்பலன் – 28.02.2019 வியாழக்கிழமை !