மகிழ்ச்சியில் மீனவர்கள்! காரைதீவில் இன்று மீன் மழை!

0
218

காரைதீவில் இன்றைய தினம் அதிகளவில் கீரி, பாரைக்குட்டி மீனினங்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

நீண்ட நாட்களின் பின்னர் தற்போது கல்முனைப்பிராந்தியத்தில் காரைதீவில் கடல் மீன்கள் தாராளமாக பிடிபடுகின்றது என அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த பல மாதங்களாக இப்பிரதேசத்தில் கடல் மீன்களுக்கு பலத்த தட்டுப்பாடு நிலவியதோடு கூடுதல் விலைக்கும் மீன்கள் விற்கப்பட்டுள்ளன.

தற்போது மீன்கள் பிடிபடுவதனால் மக்களும் மீனவர்களும் மகிழ்ச்சிடைந்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: