மகளுக்கு திருமணம்! வெளியில் வந்தார் நளினி!

0
514

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு ஆயுட் தண்டனை அனுபவிக்கும் எஸ்.நளினி தமது மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக செல்ல இந்திய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இதன் பிரகாரம் நளனி ஒரு மாத காலம் சிறைச்சாலைக்கு வெளியே சென்று திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும். அந்தக் காலத்தில் அவர் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கவோ, அரசியல்வாதிகளை சந்திக்கவோ கூடாதென நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, வேலூர் மத்திய சிறையில் இருப்பவர் நளினி. இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,

“என்னுடைய மகள் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். அவருக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கவேண்டும். எனவே, எனக்கு 6 மாதம் பரோல் வேண்டும் நளினி கோரிக்கை விடுத்திருந்தார்.

27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் எனக்கு 6 மாதம் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும். இந்த வழக்கில் நேரில் ஆஜராகி வாதிட எனக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

அந்த வகையில் ஜூலை 5ம் திகதி பிற்பகல் 2.15 மணிக்கு நளினியை ஆஜர்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி நளினி இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இன்று விசாரணை நடைபெற்ற போது ஆறு மாதங்கள் பரோல் வழங்க முடியாது என தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நளினிக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்கி இந்திய நீதிமன்றம் உத்தரவிட்டது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த 5 ராசிகளில் நீங்களும் ஒன்றா? வாழ்வில் தர்மசங்கடம், அவமானம் அடிக்கடி ஏற்படுமாம்!
Next articleவிஸ்வாசம் பாடல், கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு.. சாண்டியை பார்த்து கதறி அழுத லாஸ்லியா !