பொள்ளாச்சி சம்பவத்தில் 4 புதிய வீடியோ வெளியானது! வழக்கில் ஐந்தாவதாக சிக்கியுள்ள அந்த நபர் யார்!

0
390

பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம் சம்பவம் தொடர்பாக 4 புதிய வீடியோக்கள் வெளியாகியுள்ள நிலையில், அதில் இடம்பெற்றுள்ள பார் நாகராஜனை கைது செய்ய கோரிக்கை வலுத்துள்ளது.

பொள்ளாச்சியில் ஏழு ஆண்டுகளாக 200 பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வீடியோ எடுக்கப்பட்ட சம்பவம் தமிழத்தை உலுக்கியுள்ளது.

இது சம்மந்தமாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவர்களின் முகமூடியை கிழித்தெறிந்த பெண்ணின் சகோதரரை பார் உரிமை எடுக்கும் நாகராஜ் என்பவர் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட நாகராஜ் ஜாமீனில் வெளியில் வந்தார்.

இந்த நிலையில் அதிமுக பிரமுகரான இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து பலாத்காரத்தில் பார் ஆறுமுகத்துக்கும் தொடர்பிருக்கிறது என கூறிய மக்கள் இவரது பாரை அடித்து நொறுக்கினர்.

பாலியல் புகார் தொடர்பாக தற்போது 4 புதிய வீடியோக்கள் வெளியாகியுள்ளது. அந்த வீடியோக்களில் ஒன்றில் பார் ஆறுமுகம் பெண்களை பலாத்காரம் செய்வது போல உள்ளதாக தெரிகிறது.

எனவே வீடியோவை ஆதாரமாக வைத்துக் கொண்டு பார் ஆறுமுகத்தை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதோடு வீடியோக்கள் வெளிவருவதை தடுக்கவும் கோரப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவிபத்தில் சிக்கிய ரசிகர்களை காப்பாற்றிய நடிகர் விஜய்! தீயாய் பரவி வரும் காட்சி!
Next articleவிஸ்வரூபம் எடுக்கும் பொள்ளாச்சி விவகாரம்! போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தரதரவென இழுத்துச் சென்ற பொலிஸ்!