தீய சக்திகளின் தாக்கம், பில்லி சூனியத்தை ஓட ஓட விரட்டியடிக்க இதை செய்திடுங்க!

0

ஒருவருக்கு செய்வினை பாதிப்பு ஏற்படுவதும் அவரது கர்மவினையை பொறுத்ததே.

இக்காலத்தில் பொறாமை, வஞ்சனை கொண்ட மனிதர்கள் தமது எதிரிகளை நேரடியாக எதிர்க்க துணிவில்லாமல் மறைமுகமாக தாக்கி அழிக்கவே ஏவல், பில்லி, சூனியம் மற்றும் செய்வினை இவற்றை செய்கின்றனர்.

இப்படிப்பட்ட செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளும் எதிர்மறை சக்திகளும் அழிந்தோட கீழே குறிப்பிடப்பட்டுள்ள எளிய முறையினை பின்பற்றுங்கள்.

தேவையானவை

வெண்கடுகு – 250 கிராம்
நாய்க்கடுகு – 250 கிராம்
மருதாணி விதை – 250 கிராம்
சாம்பிராணி – 250 கிராம்
அருகம்புல் பொடி – 50 கிராம்
வில்வ இலை பொடி – 50 கிராம்
வேப்ப இலை பொடி – 50 கிராம்

முதலில் மேற்கண்ட பொருட்களை தயார் செய்து கொள்ளவும். .

பின்பு சாம்பிராணியை மட்டும் பொடி செய்து கொண்டு மீதமுள்ள 6 பொருட்களுடன் சேர்த்து ஒரு கலனில் அடைக்கவும்.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட பொருட்களின் கலவையை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் அடுப்புக்கரி நெருப்பில் தூவி தூபம் போடவும்.

தினமும் இவ்வாறு 48 நாட்களுக்குள் தூபம் தூவி வழிப்பட்டால் நிச்சயம் பலனுண்டாகும்.

ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, எதிர்மறை மற்றும் தீய சக்திகள் அனைத்தும் நிச்சயம் நீங்கும்.

இவ்வாறு செய்வதனால் குடும்பத்தில் அமைதி உண்டாகும். குடும்பத்தின் உறுப்பினர்களிடையே ஒற்றுமை உண்டாகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

குறிப்பு – மேற்கண்ட கலவையை நெருப்பில் தூவும் போது கீழே சிந்தாமல் கவனித்துக் கொள்ளவும். ஏனெனில் மேற்கண்ட 7 பொருட்களும் தெய்வத்தன்மை பொருந்தியவை. யார் காலிலும் படக்கூடாது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஆவா குழுவை இலக்கு வைத்து பருத்துறையிலிருந்து மற்றொரு குழு!
Next articleபெண்களே தப்பி தவறி கூட இதை எல்லாம் செய்யாதீங்க!