தைராய்டு பிரச்சனைக்கு எளிய வீட்டு மருத்துவம்!

0
5054

என்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனைகளை தைராய்டு நோய் என்று அழைக்கிறோம். இது மிகவும் சகஜமான ஒரு நோயாகும். பயப்படவோ அச்சப்படவோ தேவையில்லை. அதாவது நம் உடல் தைராய்டு ஹார்மோன்களை அதிகம் உற்பத்தி செய்வதே தைராய்டு நோயாகும்.
அறிகுறிகள்:

கழுத்தில் வலி மற்றும் வீக்கம், நிணநீர் திரளையில் வீக்கம், குரல் கரகரப்பாவது, மூச்சு விடுதலில் சிரமம், விழுங்குவதில் சிரமம் ஆகியவை தைராய்டின் பிரதான அறிகுறிகள்.

மேலும், நல்ல பசியிருந்தும் உடல் எடை குறைதல், இருதயத் துடிப்பு அதிகரிப்பு, உயர் ரத்த அழுத்தம், நரம்புத்தளர்ச்சி, அதிக வியர்வை, மாதவிடாய் சட்டு சட்டென வருதல், குடல் இயக்கம் அதிகரித்தல், கை நடுக்கம். ஆகியவையும் தைராய்ட் அறிகுறிகளாகும்.

உடல் எடைக்குறைப்பிற்கான அனைத்து வேலைகளைச் செய்தும் உடல் எடை குறையாமல் இருப்பது அல்லது உடல் எடை அதிகரிப்பது, சோம்பல், இருதய துடிப்பு இருக்கவேண்டிய அளவை விட குறைதல், கைகள் மறத்துப் போதல், வறண்ட சருமம், மாதவிடாயில் வெளியேற்றம் கடுமையாக இருத்தல். மலச்சிக்கல் ஆகியவையும் தைராய்டு அறிகுறிகளாகும்.

சிகிச்சை முறைகள்:

தைராய்டிற்கு சிகிச்சை என்பது தைராய்ட் கிளாண்டை முழுமையாகவோ அல்லது பாதியோ வெட்டி எடுத்தல் இதனுடன் கதிர்வீச்சு அயோடின் சிகிச்சையும் செய்யப்படுகிறது. தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யவேண்டுமென்றால் அயோடின், செலினியம் மிக முக்கியமாகும். எனவே அயோடைஸ்டு உப்பை பயன்படுத்துவது நல்லது. அதேபோல் கடல் உணவுவகைகளும் நல்லது. பசலைக் கீரை, எள், பூண்டு ஆகியவை மிகச்சிறந்தது.

செலினியம் அதிகம் உள்ள உணவு வகைகளில் இறைச்சி, மீன், காளான், சோயாபீன்கள், சூரியகாந்தி விதைகள் ஆகியவையும் அவசியம். மனக்கவலை, அழுத்தமும் தைராய்ட் சுரப்பி சரியாக வேலை செய்யாததின் ஒரு அறிகுறியே. எனவே மனதை இலகாக்குவது அவசியம்.

சிலருக்கு தைராய்டு சுரப்பியிலிருந்து ஹார்மோன்கள் தேவைக்குக் குறைவாக சுரக்கும். இது ஹைபோ தைராய்டு என்று அழைக்கப்படுகிறது. இதற்கு மருத்துவரின் ஆலோசனையின் படி மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். தைராய்டு சுரப்பியில் ஏற்படும் பழுதை உடனடியாக குணம் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

தைராய்டு பிரச்சனைக்கு பொதுவாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி அதன் தாக்கத்தை குறைக்கலாம் என தெரிந்துக்கொள்ளுங்கள்…

வெங்காயம்:

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், இரவில் தூங்குவதற்கு முன் சிவப்பு வெங்காயத்தை பாதியாக வெட்டி, அதன் சாற்றினை எடுத்து கழுத்துப் பகுதியில் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்ய வேண்டும்.

இப்படி செய்து வந்தால், தைராய்டு சுரப்பியின் செயல்பாடு தூண்டப்படுவதோடு, அது சீரான அளவில் தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.

பசலைக்கீரை:

பசலைக் கீரைச் சாறு (100 மிலி) மற்றும் இஞ்சிச் சாறு (100 மிலி) ஆகியவற்றில் 100 கிராம் கொள்ளை ஊற வைத்து பிறகு காய வைத்துப் பொடியாக்கிக்கொள்ளவும். இதில் தினமும் 2 ஸ்பூன் எடுத்து சிறிய வெங்காயம் சேர்த்து கஞ்சி காய்ச்சிக் குடித்தால் தைராய்டு நோய்கள் குணமாகும்.

சௌசௌ:

தைராய்டு கோளாரால் அவதி படுபவர்கள் சௌசௌவை பயன்படுத்தலாம். சௌசௌவில் காணப்படும் காப்பர், மாங்கனீசு, தைராய்டு நோயால் அவதிபடுபவர்களுக்கு சிறந்த மருந்தாகும். இதை உணவில் எடுத்துக்கொண்டால் தைராய்டு கோளாறு நீங்கும்.

இந்துப்பு:

தைராய்டு பிரச்னைக்கு இந்துப்பு மிகவும் நல்லது. இதில் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சல்பர் புளோரைடு, அயோடின் போன்ற தாதுக்களுடன் சோடியம் குளோரைடு உள்ளது. எனவே இந்துப்பை சமையலில் சேர்த்து வந்தால் தைராய்டு பிரச்னை சரியாகும்.

ரோஸ்மேரி ஆயில்:

சில துளிகள் ரோஸ்மேரி எண்ணெயை நீர் நிரப்பிய குளியல் டப்பில் சேர்த்து கலந்து, அதனுள் 15-20 நிமிடம் உட்கார வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் விரைவில் ஹைப்போ தைராய்டு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

தேங்காய் எண்ணெய்:

தினமும் 1-2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் தேங்காய் எண்ணெயை சூடேற்றக்கூடாது. இதனால் அதில் உள்ள கொழுப்பு அமிலங்கள், உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, ஹைப்போ தைராய்டு பிரச்சனையில் இருந்து விடுபட உதவும்.

கழுத்தின் முன்பகுதியில் கீழ் உள்ள நாளமில்லா சுரப்பிகள் தைராய்டு ஹார்மோன்களை சுரக்கிறது.

இந்த ஹார்மோன் இரத்தத்தின் மூலம் உடலெங்கும் செலுத்தப்பட்டு, அனைத்து திசுக்களின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துகின்றது.

அந்த வகையில் தைராய்டு சுரப்பி சரியாக செயல்படாமல் இருக்கும் நிலையில் தைராய்டு பிரச்சனை ஏற்படுகிறது.

தைராய்டு பிரச்சனையை குணமாக்க என்ன செய்ய வேண்டும்?

செயிண்ட் பீட்டர்ஸ் பர்க்கில் உள்ள டாக்டர் இகோர் ஜாஸ்கின் என்பவர் தைராய்டு பிரச்சனைக்கு சிவப்பு வெங்காயம் சரியான தீர்வு என்பதை கண்டுபிடித்துள்ளார்.

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், இரவில் தூங்குவதற்கு முன் சிவப்பு வெங்காயத்தை பாதியாக வெட்டி, அதன் சாற்றினை எடுத்து கழுத்துப் பகுதியில் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்ய வேண்டும்.

பின் அதைக் கழுவாமல், இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.

இப்படி செய்து வந்தால், தைராய்டு சுரப்பியின் செயல்பாடு தூண்டப்படுவதோடு, அது சீரான அளவில் தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.

மேலும் வெங்காயம் சருமத்தில் உள்ள அழுக்குகளை முழுமையாக வெளியேற்றி, சுத்தம் செய்வதோடு, சருமத்தில் உள்ள கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉணவில் தினம் தயிரை சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
Next articleகாதில் உள்ள அழுக்கை நீக்குவதால் இவ்வளவு ஆபத்தா?