பொதுமேடையில் பிரபல பாடகியின் மார்பகத்தை தொட்ட பாதிரியார்: சர்ச்சை வீடியோ!

0
540

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பெண் பாடகரின் மார்பகத்தில் கை வைத்ததாக பாதிரியார் ஒருவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகியான Aretha Franklin மறைவையொட்டி அவருக்கு மரியாதையை செலுத்தும் விதமாக, ஆலயம் ஒன்றில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட பாடகி Ariana Grande (25), நிகழ்ச்சியில் ‘You Make Me Feel Like’ என்ற பாடலை பாடி அசத்தினார்.

அவரது பாடல் நிகழ்ச்சி முடிந்ததும் பேராயர் Charles H. Ellis, Ariana-வை கட்டியணைத்தவாறு பாராட்டினார். அப்பொழுது அவரது கை திடீரென உயர்ந்து Ariana-வின் மார்பகம் மீது பட்டது.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையானதை அடுத்து, தற்போது தனியார் தொலைக்காட்சியில் தோன்றிய பாதிரியார் தன்னுடைய தவறுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையுமே நான் கட்டியணைத்து பாராட்டினேன். அதே போன்று தான் Ariana-வையும் பாராட்டினேன். அவருடைய மார்பகத்தில் கை வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடவில்லை.

எனக்கு தெரியாமலே கை பட்டிருக்கிறது. அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Previous articleகுழந்தைகளை கொலை செய்த மனைவி! கணவன் தப்பித்தது எப்படி? காதலனின் பகீர் வாக்குமூலம்!
Next articleஇலங்கையில் நடந்த விசித்திர சம்பவம்! அதிர்ந்துபோன சம்பந்தட்ட பெண்!