பைல்ஸ் மற்றும் உடல் எடையை குறைக்கும் கருணைக்கிழங்கு!

0

கருணைக்கிழங்கு உடல் எடையை குறைத்து உங்களை அழகாகவும், ஆரோக்கியமாகவும் காட்டக்கூடியது. கருணைக்கிழங்கில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. ஆனால் இதனை அதிகமாக யாரும் பயன்படுத்துவதில்லை. கருணைக்கிழங்கு ஜீரண மண்டலம் சிறப்பாக செயல்படவும், மூல நோயை குணப்படுத்தவும் உதவுகிறது. இந்த கருணைக்கிழங்கின் பலன்களை இந்த பகுதியில் விரிவாக காணலாம்.

பலம் தரும் :
கருணைக்கிழங்கு ஜீரண மண்டலத்தை சிறப்பாக செயல்பட வைக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் உடல் சக்தியை அதிகரித்து, உடல் உறுப்புகளுக்கு பலம் தருவதாகவும் இருக்கிறது.

மலச்சிக்கல்
உடல் உஷ்ணத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மை காக்க கருணைக்கிழங்கு உதவுகிறது. இதனால் மூலச்சூடு, எரிச்சல் ஆகியவை நீங்கும். நாட்பட்ட காய்ச்சல் ஆகியவை குணமாகும்.

வெள்ளைப்படுதல்
பெண்களை வாட்டி எடுக்கும் வெள்ளைப்படுதலை தடுக்க கருணைக்கிழங்கு உதவுகிறது. கருணைக்கிழங்கை சாப்பிட்டால் உடல் வலி காணாமல் போய்விடும்.

மூல நோய்க்கு
மூல நோய் உள்ளவர்கள் ஒரு மாதம் வரை வேறு உணவு எதையும் எடுத்துக்கொள்ளாமல், கருணைக்கிழங்கு ஒன்றை மட்டுமே சாப்பிட்டு, தாகம் அடங்க மோரை அருந்தி வந்தால் ஆசன வாயில் உள்ள பிரச்சனைகள் சரியாகிவிடும்.

உடல் எடை குறைய.
கருணைக்கிழங்கு ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. கல்லீரல் சுறுசுறுப்பாக செயல்பட உதவுகிறது. உடலில் கொழுப்புகள் அதிகம் சேர்வதை தடுத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது நாட்டு மருந்து கடைகளில் வன சூரணாதி என்ற பெயரில் லேகியமாக விற்கப்படுகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுவதற்கு நாம் அன்றாடம் செய்யும் இந்த செயல்கள் தான் காரணம் என்று தெரியுமா!
Next articleஒரே நாளில் மூட்டுவலியை விரட்டியடிக்க‌ செய்யும் நாட்டு வைத்தியம்!