பெற்றோர்களுக்கு எச்சரிக்கை! இணையத்தில் ஆணுறையை வைத்து விளையாடும் இளம் வயதினர்!

0
774

சமூகவலைத்தளங்களில் இளம் வயதினர் ஆணுறையை வைத்து விளையாடும் வீடியோ வைரலாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது உலகை ஆட்டிப் படைப்பது எது என்றால் இணையத்தை கூறலாம். உலகில் பெரும்பாலானோர் இணையத்திலே முடங்கி கிடக்கின்றனர்.

தற்போது இருக்கும் இளம் வயதினர் அதிக லைக்குகள் மற்றும் வைரலாக வேண்டும் என்பதற்காக எதை வேண்டும் என்றாலும் செய்வதற்கு தயராக இருக்கின்றனர்.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் இளம் வயதினரின் சில வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அதில் இது உங்களுக்கு ஒரு போட்டி என்றும் இதை உங்களால் வெற்றிகரமாக முடிக்க முடியுமா என்றும் கூறி ஒரு வீடியோ உலா வருகிறது.

அதாவது அதில் ஆணுறையை மூக்கின் வழியே இழுத்து வாய் வழியாக வெளியே எடுக்க வேண்டும். இதை சில இளம் வயதினர் செய்தும் காட்டியுள்ளனர்.

இப்படி செய்வது மிகப் பெரிய ஆபத்து என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர். இதனால் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் மீது கவனம் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: