பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள 8 வயதான திருட்டு கும்பல்! யாழில் சம்பவம்!

0
371

யாழ்ப்பாணத்தில் எட்டு வயது சிறுவர்களை கொண்ட குழுவினர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் நல்லூர் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

குறித்த முறைப்பாட்டில் இந்த சிறுவர்கள் இரவு நேரத்தில் வர்த்தக நிலையங்களுக்குள் நுழைந்து பொருட்கள் திருடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கைடயக்க தொலைபேசிகள், நகைகள் மற்றும் பணம் என்பனவற்றை இலக்கு வைத்து திருட்டு இடம்பெறுகிறது.

சிறுவர்கள் முகத்தை மூடி வர்த்தக நிலையங்களுக்குள் நுழைந்த காட்சிகள் சிசிடீவி கமராவில் பதிவாகியுள்ளது.

இந்த திருட்டு கும்பலை கைது செய்வதற்காக நல்லூர் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: