மாதவிடாயின் நிறம் என்ன? நோயின் அறிகுறியா? கண்டிப்பாக இதை தெரிந்து கொள்ளுங்கள்!

0
8136

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உதிரப்போக்கினுடைய நிறத்தை வைத்தே பெண்ணின் ஆரோக்கியத்தை கணித்து விடலாம். மாதவிடாய் காலங்களில் ஆரம்பத்தில் அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும் உதிரம், இறுதி நாட்களில் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் சிலருக்கு அவ்வாறு இல்லாமல் ஆரஞ்சு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கலாம், இதை கவனிக்க வேண்டியது ஒவ்வொரு பெண்ணின் கடமையாகும். உங்களின் ஆரோக்கியத்தில் நீங்கள் தான் கவனம் கொள்ள வேண்டும். ஆகவே ஒவ்வொரு நிறமும் எதை வெளிப்படுத்துகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

அடர்சிவப்பு நிறத்தில் மாதவிடாய் ஏற்பட்டால் இது பழைய ரத்தத்தை குறிக்கிறது, நீண்ட காலமாக கருப்பையில் சேமிக்கப்பட்ட இந்த ரத்தம் நீண்ட நேரம் எடுத்துக்கொண்டு கருப்பையை விட்டு வெளியே வருகிறது.

சிவப்பு நிறத்தில் மாதவிடாய் ஏற்பட்டால் கருப்பையில் இருந்து உடனடியாக வெளியேறும் புதிய ரத்தத்தை குறிக்கிறது, மாதவிடாய் அதிகம் உள்ள நாட்களில் இவ்வாறு வெளியேறும்.

இளஞ்சிவப்பு நிறத்தில் மாதவிடாய் ஏற்பட்டால் ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சியை குறிக்கின்றது, பொதுவாக 2வது நாளில் இந்த நிறத்தில் இரத்தப்போக்கு ஏற்படுவது வழக்கம்.

சிவப்பு நிற திட்டுகளுடன் கருப்பு நிறத்தில் மாதவிடாய் ஏற்பட்டால் மிகவும் ஆபத்தான ஒன்று, இவ்வாறு இருந்தால் உடனடியாக மருத்துவரை நாட‌ வேண்டும், கருச்சிதைவு அல்லது கருப்பையில் ஏற்பட்டுள்ள தொற்றை இது குறிக்கிறது.

ஆனால் 4வது நாளி்ல் கருப்பு நிற உதிரத்துடன் சிவப்பு நிற தட்டுகளை கண்டால் உறைந்த உதிரத்தை குறிக்கும், இதைப்பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை.

ஆரஞ்சு நிறத்தில் மாதவிடாய் ஏற்பட்டால் கருப்பையில் வாயிலுள்ள திரவங்களுடன் உதிரம் கலந்து வெளியேறுவதால் இந்த நிறம் இருக்கும், பிரகாசமாக இருந்தால் கருப்பை தொற்று இருக்கிறது என அர்த்தம், இதனுடன் நாற்றமும் இருக்கும்.

எனவே பெண்கள் மாத்திரமன்றி ஆண்களும் இவற்றை தெரிந்து வைத்திருப்பது சிறந்தது உங்களின் வாழ்க்கை துணையை நீங்கள் ஆரோக்கியத்துடன் கவனித்து கொள்ள முடியும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: