பெண்கள் 30 வயதிற்கு பின் கர்ப்பமடைந்தால் இவ்வாறான‌ பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம் எனவே அலட்சியம் வேண்டாம்.

0

பெண்கள் 30 வயதிற்கு பின் கர்ப்பமடைந்தால் இவ்வாறான‌ பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம் எனவே அலட்சியம் வேண்டாம்.

பெண்கள் சரியான வயதில் திருமணம் செய்யாமல் காலங்கடந்து 27 வயதுக்கு பிறகு திருமணம் செய்யும் போது குழந்தைபேறையும் சில ஆண்டுகள் தள்ளி போடும் போது கர்ப்பப்பை கருமுட்டை வளர்ச்சி குறைகிறது.

இதற்கேற்ப ஆண் துணையின் வயதும் அதிகரிக்கும் போது விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாகவும் பலமிழந்தும் காணப்படுகிறது.

இதனால் குழந்தை பேறு சிக்கலாகிறது. அப்படியே கருத்தரித்தாலும் பிரசவக்காலத்தில் பல சிக்கல்களை சந்திக்கிறார்கள்.

இதனால், 30 வயதுக்கு பிறகு கர்ப்பம் தரிக்கும் பெண்கள் கர்ப்பக்காலத்தில் கவனமாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..

கருச்சிதைவு பெண்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அதிகமாக பலவீனப்படுத்தகூடியவை. கருச்சிதைவு உண்டாகும் பெண்களில் 18% பேர் 35 வயதுக்குட்பட்டவர்கள் தான் என்கிறது ஆய்வுகள். கருத்தரித்த பிறகு கருவை காப்பாற்ற நீங்கள் அதிகம் பாடுபட வேண்டியிருக்கும்.

கர்ப்பக்காலத்தில் ஹார்ம்மோன் மாறுபாடுகள் மாற்றம் உண்டாகும் என்றாலும் இந்த வயதில் கருத்தரிக்கும் போது அவை கருச்சிதைவை ஊக்குவிக்கவும் வாய்ப்புண்டு.

கருத்தரித்தவும் எப்போதும் எச்சரிக்கை உணர்வுடன் உடலில் உண்டாகும் மாற்றத்தை கவனிக்க வேண்டும்.

சிறிதளவு வித்தியாசம் இருந்தாலும் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். கருவின் வளர்ச்சி இருக்கும் வகையில் மருத்துவரின் கவனிப்பு தேவை.

அதோடு கருவுற்ற பெண்களும் சத்தான உணவு மற்றும் போதுமான ஓய்வு எடுப்பதை கட்டாயமாக்கி கொள்வதன் மூலம் கருச்சிதைவு பிரச்சனையிலிருந்து விடுபட முடியும்.

மேலும், கர்ப்பக்கால நீரிழிவு நோய் தற்காலிகமானது. ஆனால் இவை பிரசவத்தில் சிக்கல் குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பு போன்றவற்றை உண்டாக்கிவிடக்கூடியது.

24 வாரங்களில் உண்டாகக்கூடிய நீரிழிவு முன்கூட்டியே வருவதற்கான சாத்தியங்கள் அதிகமாகிறது.

பரிசோதனை அவசியம்
33 வயதுக்கு மேல் கருவுற்றிருக்கும் பெண்கள் மற்ற வயது குறைந்த கர்ப்பிணிகளை காட்டிலும் முன்கூட்டியே பரிசோதனை செய்வதன் மூலம் இந்த நோயை வராமலும் வந்தால் கட்டுக்குள் வைக்கவும் செய்யலாம்.

நீரிழிவு இருப்பவர்கள் உணவு முறையில் கவனமாக இருக்க வேண்டும். ஏற்கனவே பலவீனமாக இருக்கும் இந்த பெண்கள் நீரிழிவு வந்தால் அதை எதிர்கொள்வதோடு உடல் சோர்வடையாமல் கருவுக்கு சத்து குறையாமல் ஆகாரம் எடுத்துகொள்வதையும் தவிர்க்காமல் செய்யவேண்டும்.

கர்ப்பக்காலத்தில் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வைக்க கூடியதுதான். ஆனால் இந்த வயதில் கருத்தரிக்கும் பெண்கள் இரண்டு மடங்கு உயர் ரத்த அழுத்த நோய்க்கு ஆளாக வாய்ப்புண்டு. 10 முதல் 20% வரை இந்த பாதிப்பு உண்டாக அதிக வாய்ப்புண்டு.

இந்த ரத்த அழுத்த பிரச்சனையால் வயிற்றில் கருவின் மீது அழுத்தம் அதிகமாகி பிரசவக்காலத்தில் சிக்கலை உண்டாக்குகிறது.

சில நேரங்களில் குறைபிரசவம் ஏற்படவும் காரணமாகிறது. அதோடு சுகப்பிரசவத்தை காட்டிலும் அறுவை சிகிச்சை செய்வது அதிகமாகிறது. மனதை இலேசாக வைத்துகொண்டு மருத்துவரின் ஆலோசனையோடு ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டிருப்பதும் அவசியம்.

தாய், சேய் இருவருக்குமே சத்து குறைபாடு இல்லாமல் கவனித்துகொள்ள வேண்டும். பயணங்களை தவிர்க்க வேண்டும். நிற்கும் போது, நடக்கும் போது, அமரும் போது, படுக்கும் போது என்று ஒவ்வொரு முறையும் கூடுதல் கவனத்தோடு மருத்துவரின் ஆலோசனையை பின்பற்ற வேண்டும்.

அப்படி செய்தால் குழந்தையின் ஆரோக்கியம் தாயின் ஆரோக்கியம் பாதுகாக்க முடியும்.

சரியான வயது பிரசவம்

பெண்கள் உரிய வயதில் கருத்தரித்து பிரசவக்காலத்தை எதிர்நோக்கும் போது ஆரோக்கியமான சுகப்பிரசவம் நிகழும். 21 வயது முதல் 27 வயதுக்குள் பிரசவம் என்பது உடலும் ஒத்துழைக்ககூடியதே.

இதிலிருந்து இரண்டு வருடங்கள் முன் பின் ஆனாலும் பிரச்சனையில்லை. ஆனால் 33 வயதுக்கு பிறகு கர்ப்பப்பையில் இருந்து குழந்தையை வெளியேற்ற போதுமான பலத்தை கருப்பை கொண்டிருக்காது.

கர்ப்பப்பை வாய் திறப்பதிலும், குழந்தையின் அசைவிலும் மாற்றங்கள் உண்டாகும். உடல் பலம் இழந்து கர்ப்பப்பை பலம் குறைந்த நிலையில் சுகப்பிரசவம் நிச்சயம் பாதுகாப்பானதாகவோ, இயல்பாகவொ இருக்காது என்பதால் அறுவை சிகிச்சையின் மூலம் பிரசவம் நடக்கவே அதிக வாய்ப்புண்டு.

தாமதமான கருத்தரிப்பு மகிழ்ச்சியை கொடுத்தாலும் குழந்தையின் வளர்ச்சியையும் மனதில் கொள்வது அவசியம். பிறக்கும்1000 குழந்தைகளில் 1 குழந்தை டவுன் சிண்ட்ரோம் என்னும் மரபணு நோயை கொண்டிருக்கிறது.

உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சி குறைபாடை கொண்டிருக்ககூடிய இந்த நோய் உங்கள் குழந்தையை தாக்கும் வாய்ப்பு உண்டு.

அதே போன்று முதுகெலும்பு குறைபாடு உருவாக்கவும் வாய்ப்புண்டு என்றாலும் இதை தவிர்க்க குழந்தையின் வளர்ச்சிக்கு ஸ்கேன் செய்வதும், உரிய சிகிச்சை மேற்கொள்வதும் அதை குணப்படுத்தவும் சிகிச்சை மேற்கொள்வதும் சாத்தியமாகும்.

மிக குறைந்த சதவீதமாக குழந்தை அதிக பாதிப்புக்கு உட்பட்டிருந்தால் மட்டுமே மருத்துவர் கருக்கலைப்புக்கு வலியுறுத்துவார் என்பதையும் நினைவில் கொள்வது அவசியம்.

இந்த குறைபாடுகள் எல்லாமே பிரசவக்காலத்தில் தாய் சேய் இருவரையும் பாதிப்புக்குள்ளாக்குபவை.

தாமதமான கருத்தரிப்பு உண்டாக்கும் அவஸ்தைகளை யோசித்து உங்கள் குழந்தைபேறை தள்ளிபோடாதீர்கள். குறிப்பாக 30 வயதை கடந்த பிறகு என்பது தான் மருத்துவர்கள் பரிந்துரைப்பதும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇரத்தத்தில் சர்க்கரையின் அளவானது அதிகமாக இருக்கின்றது என்று கவலைப்பட வேண்டாம் இதோ மிக எளிய வீட்டு வைத்திய முறை
Next articleஇன்றைய ராசி பலன் 01.02.2021 Today Rasi Palan 01-02-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!