பூசணிக்காயில் உள்ள புரோட்டீன் எப்படி பெண்களின் பிறப்புறுப்பு பிரச்சினையை தீர்க்கிறது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் மலட்டுத் தன்மையைப் போக்கி வீரியத்தைக் கொடுக்கும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அதற்கு மட்டுமல்லாது, புற்றுநோயையும் மிக வேகமாகக் குணப்படுத்தக்கூடிய ஆற்றல் இந்த பூசணிக்காய் விதை, சதை மற்றும் ஜூஸ்க்கு உண்டு. அதனால் தினமும் 4 ஸ்பூன் அளவுக்கு பூசணிக்காய் சாறு குடித்து வருவது நல்லது.
பொதுவாக பூசணிக்காயில் ஏராளமான அளவுக்கு நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை வேகமாகக் குறைக்க முடியும். அதனால் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றுநினைப்பவர்கள் தங்களுடைய டயட்டில் வாரத்துக்கு இரண்டு முறையாவது பூசணிக்காயை உங்களுடைய டயட்டில் கூழாகவோ, பொரியலாகவோ சூப், கூட்டு என ஏதாவது ஒருவகையில் சேர்த்துக் கொள்வது நல்லது.
வயிற்றுப் புண் மட்டும் அல்லாது உடலின் வெளிப்புறத்தில் உள்ள காயங்களும் புண்களையும் கூட ஆற்றும் பணியை பூசணிக்காய் செய்கிறது. பல நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட புண்களால் உண்டான தழும்புகளைக் கூட காணாமல் போகச் செய்யும் ஆற்றல் கொண்டது.
பூசணிக்காயை அடிக்கடி நம்முடைய உடலில் சேர்த்துக் கொள்வதால் நம்முடைய உடலுக்குத் தேவையான அளவு நார்ச்சத்தினை நம்மால் பெற முடியும். அது நம்முடைய நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். உடற்பயிற்சி செய்து முடித்த பின்பு சாப்பிடும் உணவில் பூசணிக்காய் சேர்த்துக்கொள்வது எலெக்ட்ரோலைட் சமநிலைக்கு உதவும்.
பூசணிக்காயில் இரண்டு வகை உண்டு. ஒன்று வெள்ளை பூசணி. மற்றொன்று மஞ்சள் பூசணி. இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அது மிகவும் நல்லது. அதிலுள்ள வைட்டமின்கள் கண் பார்வையைத் தெளிவாக்குகிறது.
பொதுவாக காய்ச்சல் வந்துவிட்டால் வாய்ப்புண்ணும் வரும். நாக்கெல்லாம் கசக்கும். எதுவுமே சாப்பிட முடியாது. அந்த சமயங்களில் பூசணிக்காயின் சதைகளை எடுத்து கூழ் போல செய்து, சாப்பிடக் கொடுத்தால், காய்ச்சல் மற்றும் சளித் தொல்லை, மூக்கடைப்பு ஆகியவை குணமடையும்.
உங்களுடைய ரத்தத்தை சுத்தம் செய்து அதிலுள்ள டாக்சின்களை வெளியேற்ற வேண்டுமென்றால், வெள்ளைப் பூசணிக்காயின் சாறெடுத்து காலையில் வெறும் வயிற்றில் தினமும் 30 முதல் 50 மில்லி அளவுக்கு குடித்து வந்தாலே போதும். இதயம் பலப்படும். ரத்தம் சுத்தமடையும்.
பெண்களுக்குப் பொதுவாக இந்த பிரச்சினை இருக்கும். ஆனால் அதற்கு குறிப்பிட்ட அளவுண்டு. அளவுக்கு அதிகமாக வெள்ளைப்படுதல் ஏற்படும்போது இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படுவதுண்டு. அப்படி வெள்ளைப்படுதல் பிரச்சினை இருக்கிறவர்கள் வெண்பூசணி சாறு தினமும் குடித்து வந்தால் இந்த பிரச்சினை அடியோடு நீங்கிவிடும்.
நம்முடைய நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது பூசணிக்காய். இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் நெஞ்சில் தேங்கியிருக்கிற மார்புச்சளி குணமடையும். இருமல், ஜலதோஷம், நெஞ்சு சளி, வாந்தி, தலைசுற்றல் ஆகிய பிரச்சினைகள் தீர்க்கப்படும்.
பொதுவாக ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும் தீர்க்கும். மேலும் குடற்புழுக்களை வெளியேற்ற பூசணிக்காய் உதவும். அதன் இலைகள் கூட இதற்குப் பயன்படும்.
cervical cancer என்று சொல்லப்படுகின்ற பெண்ணுறுப்பில், கருக்குழாயில் உண்டாகிற புற்றுநோயை இந்த வெண் பூசணிக்காயில் இருந்து தயாரிக்கப்படும் நெய்யால் குணப்படுத்த முடியும்.
சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் பூசணிக்காய் சாறினை சுமார் 120 மில்லி அளவும், ஒரு தேக்கரண்டி நாட்டுச் சர்க்கரையும், இரண்டு தேக்கரண்டி தேனும் கலந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகம் தொடர்புடைய நோய்கள் முழுமையாக குணமடையும்.