புல்வாமா பாணியில் இந்தியாவில் வெடிக்குண்டு தாக்குதல்! 15 வீரர்கள் பலி! வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்!

0
319

மகாராஷ்டிராவில் புல்வாமா தாக்குதல் பாணியில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் கமாண்டோ படையை சேர்ந்த 15 போலீசார் கொல்லப்பட்டனர். 10 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். மாவோயிஸ்டுகளின் இந்த வெறிச்செயலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், கட்சிரோலி மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. இவர்கள் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் விரைவு அதிரடிப்படையை சேர்ந்த கமாண்டோ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த மாவட்டத்தில் உள்ள தாதாபூர் சாலையில் குர்கேதா என்ற இடத்தில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தனியார் கட்டுமான நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இது, சாலை அமைப்பதற்கு தேவையான இயந்திரங்கள், லாரிகள் போன்றவற்றை சாலையில் நிறுத்தி வைத்து இருந்தது.

இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும், கட்சிரோலி மாவட்டத்தை சேர்ந்த விரைவு அதிரடிப்படையை சேர்ந்த கமாண்டோ போலீசார் வாகனங்களில் விரைந்தனர். தீ வைப்பு சம்பவம் நடந்ததும் அதிரடிப்படை வீரர்கள் வருவார்கள் என்பதை முன்கூட்டியே கணித்து இருந்த மாவோயிஸ்ட்டுகள், அவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டனர்.

வீரர்கள் வரக்கூடிய ஜம்போர்கேதா – லெந்தாரி இடையிலான சாலையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை புதைத்து வைத்தனர். அவர்கள் திட்டமிட்டப்படியே, அந்த சாலையில் கமாண்டோ வீரர்களின் வாகனம் வந்தபோது தூரத்தில் இருந்து ரிமோட் கன்ட்ரோல் மூலம் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில், வீரர்கள் வந்த வாகனம் வெடித்து சிதறியது.

இந்த தாக்குதலில் வாகனத்தின் டிரைவர் மற்றும் 15 கமாண்டோ வீரர்கள் உடல் சிதறி பலியாகினர். மேலும், 10 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கடந்தாண்டில் இந்த மாவட்டத்தில் 44 மாவோயிஸ்டுகளை அதிரடிப்படை வீரர்கள் தாக்குதல் நடத்தி கொன்றனர். அதற்கு பழிவாங்கும் விதமாகவே இத்தாக்குதலை மாவோயிஸ்டுகள் இப்போது நடத்தி இருப்பதாக கருதப்படுகிறது. இத்தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், ‘மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்படும்’ என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleடிக்டாக் வீடியோவால் 4பேருக்கு ஏற்பட்ட விபரீதம்! வெளியான சோக சம்பவம்!
Next articleபெண் காவலர் காதலனுடன் தனிமையில் நெருக்கம்! இணையத்தில் கசிந்த வீடியோவால் பரபரப்பு!