சீனாவிலும் ஜப்பானிலும் புற்றுநோய் குறைவு ரகசியம் இதுதான்!

0
13405

சீனாவின் மன்னராக இருந்த ஷென் நங் ஒருமுறை தேயிலை இலையை நீரில் போட்டு கொதிக்கவைத்தார். கருஞ்சிவப்பு நிறத்தில் இருந்த அந்த திரவத்தை மன்னர் ஷென் நங் குடித்து பார்த்த போது துள்ளி குதித்தார்.

அந்த சூடான திரவம் அவர் நாக்கில் பட்டதும், மன்னரின் உடலுக்குள் உற்சாக துள்ளல் எழுந்தது. அதிலிருந்து தொடங்கியது தான் க்ரீன் டீ வரலாறு.

தவிர ’சாயா’ என்ற வார்த்தை பயன்பாடும் அப்போது தான் தொடங்கியது. அது எல்லா இடங்களுக்கும் பரவி பச்சைத் தேயிலை உற்பத்தியில் ஒவ்வொரு நாடும் போட்டி போடுகிற அளவிற்கு நிலை மாறிவிட்டது.

கிரீன் டீயின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் தான். இதனை தமிழில் நோய் எதிர்ப்பு சக்தி என்று அழைக்கிறோம்.

ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம். கிரீன் டியின் உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் அபாயகரமான பிரீ ரேடி செல்களை சமன்படுத்தி, நம் உடலில் ஒவ்வொரு செல்லையும் புதுப்பித்து வாழ்நாட்களை நீடிக்க செய்கின்றன.

பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது. மார்பகப் புற்று நோய்க்கும், கல்லீரல் புற்றுநோய்க்கும் மிகச்சிறந்த மருந்து பொருளாகவும் கிரீன் டீ பயன்படுகிறது.

புற்றுநோய்க்கு காரணமான செல்களை வளரவிடாமல் தடுப்பதே இதன் முக்கிய வேலை. இந்தப் பச்சைத் தேயிலையை சீனர்களும், ஜப்பானியர்களும் மட்டுமே அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

அதனால் உலகளவில் மற்ற நாட்டினரைவிட புற்றுநோய்க்கு ஆளாவது சீனாவிலும் ஜப்பானிலும் மிகவும் குறைவு. கிரீன் டீ பருகுவதால் தோல் விரைவில் சுருக்கமடையாது என்பதோடு, இளமையுடனும், வனப்புடனும் இருக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: