பிறந்த குழந்தைகளை பிரிட்ஜில் வைத்து கொடூரமாக கொலை செய்த தாய்!

0
344

ஜேர்மனியில் பிறந்த இரண்டு குழந்தைகளை பிளாஸ்டிக் பையில் அடைத்து பிரிட்ஜில் வைத்திருந்த தாய்க்கு நீதிமன்றம் 9 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கு தீர்ப்பளித்துள்ளது.

ஜேர்மனியின் Benndorf பகுதியைச் சேர்ந்த 46 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் வீட்டில் கடந்த ஜனவரி மாதம் பிறந்த குழந்தைகளின் உடல் பிரிட்ஜில் அடைக்கப்பட்ட இறந்த நிலையில் இருந்துள்ளனர்.

இதனால் அந்த பெண்ணை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது அந்த பெண் கடந்த 2004-ஆம் ஆண்டு கர்ப்பமாக இருந்துள்ளார், ஆனால் அதை மறைத்து பிறந்த குழந்தையை ஒரு பிளாஸ்டிக் பையில் அடைத்து பிரிட்ஜின் உள்ளே வைத்து அடைத்துள்ளார்.

அந்த குழந்தை மூச்சு திணறி உறைந்து இறந்துள்ளது. இதே போன்று 4 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 2008-ஆம் ஆண்டு பிறந்த ஆண் குழந்தையையும் கொலை செய்துள்ளார். பிரேத பரிசோதனையில் குழந்தைகள் பிறக்கும் போது நல்ல ஆரோக்கியத்துடன் தான் பிறந்துள்ளன எனவும் இவர் தான் குழந்தைகளை கொலை செய்துள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அந்த பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் 9-ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: