பிரித்தானியாவில் தலையில் காரை ஏற்றிய கொடூர நபர்: உயிருக்கு போராடும் பரிதாபம்!

0
533

பிரித்தானியாவில் காரின் அருகில் நின்று பேசிக் கொண்டிருந்த நபரை தலையில் ஏற்றிவிட்டு அதன் பின் அங்கிருந்து தப்பியதால் அவருக்கு நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

பிரித்தானியாவின் Brighton சாலையில் பரபரப்பாக வாகனங்கள் இயங்கிக் கொண்டிருந்த போது கடந்த ஆண்டு ஜுலை மாதம் 11-ஆம் திகதி அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த Colbert(35) என்பவர் அந்த சாலையில் நின்று கொண்டிருந்த Mercedes காரின் உள்ளே இருந்த Shahid Ali (43) என்பவரிடம் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

சிக்னல் காரணமாக வாகனங்கள் எல்லாம் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த நேரத்தில் Shahid Ali திடீரென்று தன்னுடைய காரை Colbert மீது ஏற்றி விட்டு, அங்கிருந்து அதிவேகமாக சென்றுள்ளார்.

இதனால் Colbert-க்கு தலை மற்றும் நெஞ்சுப் பகுதியில் பயங்கரமாக அடி ஏற்பட்டுள்ளது. அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இருப்பினும் அவருடைய மூளையில் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு நேற்று Birmingham நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி இது கொலை செயலுக்கு ஈடானது உன்னுடைய கோபத்தினால் அவருக்கு மூளையில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து ஆபத்தான நிலையிலே உள்ளார், நீ உன்னுடைய காரை ஓட்டுவதற்கு பயன்படுத்தாமல் கொலை செய்வதற்கு பயன்படுத்தியது போல் உள்ளது.

இதனால் உன்னுடைய ஓட்டுனர் உரிமத்தை 15 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் தடை செய்வதாகவும், அதுமட்டுமின்றி இது போன்று குற்றச் செயலில் ஈடுபட்ட உனக்கு 12-ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் நபர் தன்னுடைய 35-வது பிறந்த நாளை கொண்டாடுவதற்கே அன்றைய தினம் அங்கு வந்துள்ளார். அப்போது போக்குவரத்து நெரிசல் குறித்து அந்த நபர் பேசிய போது தான் இந்த சம்பவம் நடந்துவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் தற்போது சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நபர் கடந்த 2004 முதல் 2006 காலக்கட்டங்களில் பாகிஸ்தானுக்கு சட்ட விரதோமாக உபகரணங்கள் அனுப்பியது தொடர்பாக கடந்த 2009-ஆம் ஆண்டு 27 மாதங்கள் சிறையில் இருந்துள்ளான் என்று அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: