பிரஷர் குக்கரில் உணவு சமைப்பது ஆபத்தா!

0

இன்றைய அவசரமான காலத்தில் எல்லாமே அவசரமாகிவிட்டது. ஆம் நாம் உணவு சமைப்பது கூட காலச்சூழலுக்கு ஏற்ப மாறிவிட்டன அல்லவா?

தற்போது பெரும்பாலான வீடுகளில் பிரஷர் குக்கரில் தான் உணவு சமைக்கிறார்கள். இதில் சமைப்பதால் உணவு சமைக்கும் நேரம் மிக குறைவாக உள்ளது.

இந்நிலையில், பிரஷர் குக்கரில் சமைப்பதால் ஆபத்து என்ற பயம் பலர் மனதில் இருக்கிறது.

பிரஷர் குக்கரில் சமைப்பதால் ஆபத்தா?
இத்தாலியின் ‘ஜேர்னல் ஆப் புட் சயின்ஸ் (journal of food science) நிறுவன ஆராய்ச்சிப்படி, பிரஷர் குக்கரில் சமைப்பதால் 90-95 சதவிகித ஊட்டச்சத்துக்களும் நமக்கு கிடைப்பதாகக் கூறப்பட்டுள்ளது. பிரஷர் குக்கரில் உணவு சமைப்பது நல்லதுதான்.

இருந்தபோதிலும், அலுமினியம், காப்பர்(Copper), எஸ்.எஸ்.ஸ்டீல்(stainless steel), டைட்டானியம்(Titanium) எனப் பலதரப்பட்ட மெட்டல்களிலும் பிரஷர் குக்கர்கள் செய்யப்படுகின்றன.

இவற்றில், அலுமினிய குக்கரில் உணவு சமைக்கும்போது ஒரு நாளைக்கு 1-2 மில்லி கிராம் அலுமினிய மெட்டல் உணவின் வாயிலாக நம் உடலில் கலக்க வாய்ப்புள்ளது.

எஸ்.எஸ்.ஸ்டீல், காப்பர் மற்றும் டைட்டானியம் மெட்டல்களினால் ஆன பிரஷர் குக்கர்களில் சமைக்கும்போது, உணவுகளில் கலக்கும் மெட்டல்களின் அளவு மிகக்குறைவுதான்.

ஆனால், உலக சுகாதார நிறுவனத்தின் (World Health Organisation) அறிக்கை ஒன்றில், நாம் உணவு சமைக்கும் பாத்திரங்களில் இருந்து ஒரு நாளுக்கு 50 மில்லி கிராம் அளவிலான மெட்டல் நம் உணவில் கலக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பாதுகாப்பான பிரஷர் குக்கரை பயன்படுத்தி ஆரோக்கியமாக இருப்போம்.

பிரஷர் குக்கர் மட்டுமில்லாமல் எந்த வகை பாத்திரமாக இருந்தாலும் அவற்றின் ஆயுட்காலம் முடிந்தவுடன் அவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleடயட்ல இருக்கீங்களா? அப்படின்னா இரவு உணவாக இதெல்லாம் சாப்பிடுங்க!
Next articleஆண்கள் அதன் அளவை பெ(ரிதா)க்க கடைப்பிடிக்க வேண்டிய‌ வழிமுறைகள் !