பிக்பாஸ் ஐஷ்வர்யா மனம் உருகி வெளியிட்ட முதல் வீடியோ!

0
467

பிக்பாஸ் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது ஓவியா தான். அந்தளவிற்கு புகழின் உச்சத்தை தொட்டவர் அவர்.

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கலுடன் நடந்துகொண்ட விதம், அவருடைய குணம் என அனைத்தும் குழந்தைத் தனமாகவும், அனைவருக்கும் பிடித்து போக, தமிழகம் உட்பட சில நாடுகளிலும் கூட அவரைப் பற்றிய பேச்சு தான் ஓடிக் கொண்டிருந்தது அந்த சமயத்தில்.

அதுபோல, இந்த வருடம் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்2 -வில் வெற்றி பெற்றது என்னவோ ரித்விகா தான். ஆனால், பிக்பாஸ் வீட்டிற்குள் அவ்வளவு பிரச்சனையை ஏற்படுத்தி போட்டியாளர்களை மரியாதை குறைவாக நடத்தி கெட்ட பெயரை சேர்த்தவர் ஐஷ்வர்யா தத்தா.

இருந்தபோதிலும், இவர் நாமினேட் ஆகிய ஒவ்வொரு முறையும், ஓட்டிங் ப்ராஸசில் காப்பாற்றப்பட்டு பைனல் வரை சென்றார்.

இதற்கிடையில், இவரை பிக்பாஸ் தான் காப்பாற்றினார், இவர் பிக்பாஸ் வெற்றிக்கு தகுதியானவர் இல்லை என பல விமர்சனங்கள் எழுந்தது.

இந்நிலையில், தற்போது, பிக்பாஸ் முடிந்ததிலிருந்து ட்விட்டரில் படு ஆக்டிவாக இருக்கும் ஐஷ்வர்யா தற்போது வீடியோ ஒன்ரை வெளியிட்டுள்ளார். அதில், அவர் தனக்கு ஆதரவு தெரிவித்த தமிழ் மக்களுக்கு நன்றி என்றும் கூறியுள்ளார்.

மேலும், பிக்பாஸ் வீட்டில் என்னுடன் இருந்தவர்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவர்களிடம் மிகவும் தவறான முறையில் நடந்து கொண்டேன். அவர்களை கஷ்டப்படுத்தி விட்டேன் என மனமுருகி பேசியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: