பால் மா 75 ரூபா, சமையல் எரிவாயு 245 ரூபா அதிகரிப்பு?

0
404

பால் மா ஒரு கிலோவின் விலை 75 ரூபாவினாலும், சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 245 ரூபாவினாலும் இன்னும் சில தினங்களில் அதிகரிக்கப்படவுள்ளதாக அரச வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

தற்போது லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் பால் மா விலை மற்றும் சமையல் எரிவாயு காஸ் சிலிண்டர் விலை அதிகரிப்பு தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்படும் எனவும் அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உலக சந்தையில் பால்மா மற்றும் சமையல் வாயு விலைகள் அதிகரித்துள்ள காரணத்தினால் இந்நாட்டு பால் மா மற்றும் காஸ் நிறுவனங்கள் விலையை அதிகரிக்கும் படி வாழ்க்கைச் செலவு தொடர்பான குழுவிடமும் பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபையிடமும் அனுமதி கோரப்பட்டிருந்தது.

ஒரு கிலோ பால் மாவின் விலை 100 ரூபாவினாலும் காஸ் விலை சிலிண்டர் ஒன்றுக்கு 275 ரூபாவினாலும் அதிகரிக்கும் படி இந்நிறுவனங்கள் பாவனையாளர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்திருந்தன.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: