பாதிக்கப்பட்ட கல்லீரலை மீண்டும் புதுப்பிக்க இத கொஞ்சம் சாப்பிடுங்க!

0
1034
Sign Up to Earn Real Bitcoin

உடலில் கல்லீரல் மிகவும் பெரிய சுரப்பி. இந்த கல்லீரல் பாதிக்கப்பட்டால், அது ஒட்டுமொத்த உடலையும் மோசமாக்கிவிடும். அதிலும் கல்லீரலில் கொழுப்புக்கள் அதிகம் சேர்ந்துள்ளது என்று மருத்துவர் சோதித்து கூறிவிட்டால், நம்மில் பலரும் இறக்கப் போகிறோம் என்று தான் நினைப்போம். ஆனால் அது தான் இல்லை. இந்த கொழுப்பு கல்லீரலை நீக்க ஏராளமான இயற்கை வழிகள் உள்ளன.

முக்கியமாக கொழுப்பு கல்லீரல் மது அருந்துவதால் மட்டுமின்றி, உடல் பருமனாலும் ஏற்படும். இப்பிரச்சனையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால், கல்லீரல் செயலிழப்பு ஏற்படுவதோடு, கல்லீரல் புற்றுநோய் கூட ஏற்படும் வாய்ப்புள்ளது.

பழங்கள்

கல்லீரல் பிரச்சனைகளை சரிசெய்ய ஏராளமான பழங்கள் உள்ளன. ஆனால் நம்மில் பலருக்கும் அந்த பழங்களின் மகிமை தெரியாமல் தவிர்ப்போம். சில நேரங்களில் நம்மை அறியாமல் சாப்பிடும் சில பழச்சாறுகளும், பல தீவிர பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும்.

புளி

கல்லீரலில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்க சமையலுக்கு பயன்படுத்தும் புளி உதவும். கல்லீரல் பிரச்சனைகளுக்கு புளி மட்டுமின்றி, அதன் இலைகளும் நல்ல நிவாரணத்தை வழங்கும்.

புளியின் நன்மைகள்

புளி உடலை சுத்தம் செய்வதோடு, செரிமானத்திற்கு உதவும். மேலும் இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் அமிலங்கள், கல்லீரலுக்கு பாதுகாப்பு அளிக்கும், பித்தநீர் பிரச்சனைகளை சரிசெய்யும் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்.

இப்போது இந்த புளியை எப்படியெல்லாம் பயன்படுத்தினால் கல்லீரல் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, கல்லீரலைப் புதுப்பிக்கலாம் என்று காண்போம்.

தேவையான பொருட்கள்:

புளி – 2 கையளவு
தண்ணீர் – 1 லிட்டர்
செய்முறை:

நீரில் புளியை நன்கு ஊற வைத்து, கையால் பிசைந்து வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து, தினமும் சிறிது உட்கொண்டால், கல்லீரல் பிரச்சனைகள் அகலும்.

தேவையான பொருட்கள்:

புளியம் மர இலைகள் – 25
தண்ணீர் – 1 லிட்டர்
செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் இலைகளை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி, 1/2 மணிநேரம் கழித்து வடிகட்டி, இனிப்பு வேண்டுமானால் அத்துடன் தேன் அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்து குடிக்கலாம். ஆனால் எவ்வித இனிப்பும் சேர்க்காமல் குடிப்பதே சிறந்தது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: