பாணந்துறை வீதிகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு!

0
659

பாணந்துறை வீதிகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேல் மாகாணத்தில் அமைந்துள்ள பாணந்துறை நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் காணப்படும் வீதிகளுக்கான பெயர் பலகைகளில் இவ்வாறு தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. திட்டமிட்ட அடிப்படையில் தமிழ் மொழி உதாசீனம் செய்யப்பட்டு தனிச் சிங்கள மொழியில் வீதிகளின் பெயர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு தனிச் சிங்கள மொழியில் வீதிகளின் பெயர்ப் பலகைகள் காட்சிப்படுத்தப்படுவது சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்த சில படங்களும் சமூக ஊடகங்களில் உலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநாட்டு மக்களுக்கு இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை
Next articleசர்வதேசம் தலையிடாமைக்கு இதுவே காரணம்! வீ.ஆனந்தசங்கரி