பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து மிரட்டிய இந்திய நீர்மூழ்கி கப்பல்! வெளிவரும் புதிய தகவல்!

0
422

இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய நீர்மூழ்கி கப்பல் அத்துமீறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை கவனித்த பாகிஸ்தான் கடற்பட்டை எச்சரிக்கை செய்து துரத்தியதாகவும் இஸ்லாமாபாத்தில் இருந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய கடற்படை தளபதி சுனில் லம்பா, தீவிரவாதிகளின் தாக்குதல் கடல் வழியாக ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரித்திருந்த நிலையிலேயே இஸ்லாமாபாத்தில் இருந்து நீர்மூழ்கி கப்பல் அத்துமீறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் ஒருவாரம் கடந்த நிலையிலேயே கடற்படை தளபதி சுனில் லம்பா குறித்த எச்சரிக்கையை விடுத்திருந்தார்.

இதனிடையே இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் வேவு பார்க்க வந்த பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் ஒன்றையும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

கடற்படை தளபதி சுனில் லம்பா மேலும் தெரிவிக்கையில், புல்வாமா தாக்குதலை முன்னெடுத்த தீவிரவாதிகளுக்கு ஒரு நாடு போதிய உதவிகளை செய்கிறது.

இது இந்தியாவின் ஸ்திரத்தன்மைக்கு விடுக்கப்படும் சவால். இந்தியாவின் அண்டை நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியாவுக்கு தீவிரவாதிகள் தொடர்பில் தெளிவான பார்வை உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்திய நீர்மூழ்கிக் கப்பல் தங்கள் கடலில் ஊடுருவ முயல்வதைக் காட்டும் காட்சி என்று கூறி ஒரு காணொளியையும் பாகிஸ்தான் பகிர்ந்துள்ளது.

ஆனால், பாகிஸ்தான் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், கராச்சியில் இருந்து 415 கி.மீ தொலைவிலும், பஞ்சாபின் க்வாடர் பகுதியில் இருந்து 158 கி.மீ தொலைவில் இந்திய நீழ்மூழ்கிக் கப்பல் நிலை கொண்டுள்ளதாகவும், இது பாகிஸ்தான் எல்லையில் அல்ல எனவும் இந்திய தரப்பில் இருந்து விளக்கம் அளித்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகள்ளக்காதல் ஜோடிகளுக்கு வழங்கப்பட்ட வித்தியாசமான தண்டனை! வலியால் கதறித்துடித்து! சுருண்டு விழுந்த சோகம்!
Next articleகைது செய்யப்படும் நிலையில் ஒவியா! ’90ml’ படத்தில் எல்லை மீறிய செயல்!