பள்ளி மாணவனுக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய பெண் ஆசிரியை: கைது செய்த பொலிசார்!

0
460

அமெரிக்காவில் பெண் ஆசிரியை பள்ளி மாணவன் ஒருவனுடன் நெருக்கமாக இருந்த காரணத்தினால் பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் New Jersey மாகாணத்தின் Ewing மேல்நிலைப் பள்ளியில் மாற்று ஆசிரியராக Chelsea Hahn என்ற பெண் கடந்த 2017-ஆம் ஆண்டு சேர்ந்து பணியாற்றி வந்துள்ளார்.

வருடத்திற்கு 48,850 டொலர் சம்பாதித்து வந்த இவர் பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவன் ஒருவனுடன் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.

வகுப்பறையில் குறித்த சிறுவனுக்கு உதட்டோடு உதட்டு முத்தம் கொடுத்ததுடன், தன்னுடைய நிர்வாண புகைப்படங்கள் போன்றவைகளை அனுப்பி மாணவனை தன்னுடைய ஆசைக்கு இணங்க வைத்துள்ளார்.

இதன் காரணமாக பொலிசார் Chelsea Hahn மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக Ewing மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் Edward Chmiel கூறியுள்ளார்.

மேலும் இது பள்ளிக்கு ஒரு அவமானம் எனவும், விசாரணைக்கு தாங்கள் சரியாக ஒத்துழைப்பு தருவோம் என்று பொலிசாருக்கு உறுதி அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மாணவனின் நலன் கருதி பொலிசார் அந்த சிறுவனின் பெயரை தெரிவிக்கவில்லை என்று உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: