பனங்கருப்பட்டியின் மருத்துவ பயன்கள்!

0

பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

விட்டமின்-பி, மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.

1. பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத் தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். நார்ச்சத்தும் இதில் அதிகம்.

2. குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித் தொல்லை நீங்கும்.

3. கருப்பட்டி மற்றும் பனங்கல்கண்டில் எண்ணற்ற விட்டமின்களும், மினரல் சத்துக்களும் உள்ளன. கருப் பட்டி இயற்கையாகவே உடலை குளிர்ச்சியடையச் செய்யும். அதில் உள்ள ‘கிளைசீமி இன்டெக்ஸ்’ உடலில் கலக்கும் சர்க்கரை அளவை, வெள்ளை சர்க்கரையை விட பாதிக்கும் கீழாக குறைக்கிறது.

4. சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதி கமாக இருக்கிறது.கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது.

கருப்பட்டியை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்புகின்றனர். வண்டியில் செல்பவர்கள் கூட பனங்கருப்பட்டியைப் பார்த்ததும் திரும்பி வந்து வாங்கி செல்வார்கள். கருப்பட்டியில் இல்லாத பயன்களே இல்லை. பலர் அதன் சிறப்பை உணரவில்லை’ என்கிறார் பனங்கருப்பட்டி வியாபாரி ஒருவர்.

பழந்தமிழர் வாழ்வில் முக்கிய பங்கு வகித்த கருப்பட்டி இன்று தமிழர்களால் முற்றிலும் புறக்கணிக்கப் பட்டுவிட்டது அல்லது மறக்கப்பட்டு வருகிறது என்பது கசக்கும் உண்மைதான்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபச்சைப் பயறின் நன்மைகள்! பச்சை பயறு சாப்பிடுவதை யார் தவிர்க்க வேண்டும்!
Next articleபாடசாலை மாணவர்களுக்கு கொண்டுவரப்படவுள்ள மாற்றம்! அரசாங்கத்தின் முக்கிய தீர்மானம்!