பதிலடி தாக்குதலில் குறி வைக்கப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படங்கள்!

0
554

பதிலடி தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், துயரத்தையும், வேதனையையும் ஏற்ப்படுத்திய புல்வாமா தற்கொலை படை தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.

காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது. ஒட்டு மொத்த இந்திய மக்களும் கடும் கோவத்தில் உள்ளனர். மற்றும் உலக நாடுகளும் இதற்கு கண்டனம் வெளியிட்டது நாம் அறிந்ததே.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நடவடிக்கையை இந்திய ராணுவம் தொடங்கி உள்ளது.

இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் இந்திய விமானப்படை விமானங்கள், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் முகாமை குறிவைத்து குண்டுகளை வீசின.

சுமார் 1000 கிலோ எடை கொண்ட குண்டுகள் வீசப்பட்டதில், பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து இந்திய விமானப் படையினருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி மசூத் அசாரின் மாமனார் உட்பட பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 12 பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன எனவும் கூறப்பட்டது.

இந்தநிலையில், தற்போது பதிலடி தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அதில் முப்தி அசார் கான், மசூத் அசாரின் மூத்த சகோதரர் இப்ராஹிம் அசார், மவுலானா அமர், மவுலானா தல்ஹா சைப் ஆகியோரின் புகைபடங்கள் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், துயரத்தையும், வேதனையையும் ஏற்ப்படுத்திய புல்வாமா தற்கொலை படை தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது. கடந்த 12 நாட்களாக பதிலடி குறித்து ஆலோசனை மற்றும் அதற்க்கான செயல்பாடுகளை குறித்து நடவடிக்கையில் இந்திய ராணுவம் ஈடுபட்டு வந்தது.

Previous articleசிக்கித்தவித்து அசிங்கப்பட்ட கோபிநாத்! அரங்கத்தில் பெண்கள் கொடுத்த தொல்லை!
Next articleமெல்ல மெல்ல பழையபடி சேட்டையை ஆரம்பிக்கும் நடிகர்!