பதறியடித்து ஓடிய மணமகன்! திருமணத்திற்கு வந்த மணப்பெண்ணின் முதல் காதலன்!

0
422

தம்புள்ளையில், இடம்பெற்ற திருமணம் ஒன்றின்போது மணமகளின் முதல் காதலன் திடீரென மண்டபத்திற்கு பிரசன்னமானதால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

தம்புள்ளை நகரப் பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இன்றைய தினம் இடம்பெற்ற பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரின் திருமண வைபவத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், குறித்த திருமணத்திற்கு சென்ற நபர் ஒருவர் திருமணத்தை குழப்பும் விதமாக கூச்சலிட்டுள்ளார்.

மணமகள் தனது முன்னாள் காதலி எனவும், அவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களையும் சபையில் காண்பித்து கோசமிட்டதுடன் திடீரென பாய்ந்துச் சென்று மணமகனையும் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து அந்த மண்டபத்தில் கடும் பதற்ற நிலை உருவானதுடன் மணமகன் உடனடியாக தனது உறவினர்களுடன் குறித்த மண்டபத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தியநபர் பெண் வீட்டாரால் எச்சரிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: