பஞ்சாயத்து அளித்த கொடூர தண்டனை! சிறுமியை பலாத்காரம் செய்த சொந்த மாமா!

0

ஜார்கண்டில் 13 வயது பெண் குழந்தையை, குழந்தையின் சொந்த மாமாவே கற்பழித்த கொடூர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

ஜார்கண்ட்டின் சாய்பாஸா என்ற பகுதிக்கு உட்பட்ட மஞ்சரி எனும் கிராமத்தில் 13 வயது சிறுமியை சொந்த மாமாவே கற்பழித்துள்ளார். இதனால் கற்பமடைந்த வளரிளம் பெண் ஊரின் முன் வெளிச்சத்துக்கு வர, ஊரின் பாரம்பரிய பஞ்சாயத்து, ஊரின் மரபு மற்றும் பண்பாட்டு கட்டுப்பாடுகள் அழிந்துவிட்டதாக எண்ணி ஊர் பொதுமக்கள் முன்னிலையில் பஞ்சாயத்து நடத்தியுள்ளனர். அப்போது அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

அதாவது ஊரின் மரியாதையை கெடுத்ததாகவும், ஊரின் கவுரவத்துக்கு களங்கம் விளைவித்ததாகச் சொல்லியும் பாதிக்கப்பட்ட 13 வயது பெண் குழந்தையையும் , பலாத்காரம் செய்தவனையும் உயிருடன் எரித்துக் கொல்ல திட்டமிட்டுள்ளனர்.

அப்படி இல்லை என்றால் 5 லட்சம் அபராதமும் கட்டச் சொல்லி தீர்ப்பளித்துள்ளது. இதனை கேள்விப்பட்ட பொலிசார், 6-ம் வகுப்பு படித்துவந்த 13 வயது குழந்தையை பலாத்காரம் செய்த குழந்தையின் 28 வயது மாமாவை கைது செய்துள்ளனர்.

இதுபோன்று தீர்ப்பளித்த பஞ்சாயத்து முக்கியஸ்தர்களையும் விசாரித்து வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசின்மயிக்கு அவரது இரண்டாவது மகன் முதல்முறையாக பதிலடி! வைரமுத்து பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியாது!
Next articleஅனுஷ்கா எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு! அதுவரை சினிமாவில் நடிக்கமாட்டேன்!