இதுவரை வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் உள்ளதா? பச்சை எலுமிச்சை இதோ!

0

ஒருவரது வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகம் இருந்தால், அதனால் அடிக்கடி உடல்நல குறைபாடு ஏற்படுவதோடு, உறவுகளுக்குள் பிரச்சனைகள் மற்றும் பணப்பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.

இதுவரை வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் உள்ளதா என்பதை ஒரு டம்ளர் நீரைக் கொண்டு எப்படி அறிந்து கொள்வது என்று பார்த்தோம்.இப்போது இந்த கட்டுரையில் எலுமிச்சையைக் கொண்டு வீட்டிலிருக்கும் கெட்ட சக்தியை எப்படி வெளியேற்றுவது என்று பார்க்கப் போகிறோம். பொதுவாக எலுமிச்சை பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளது.

அது உடல் ஆரோக்கியம், அழகு போன்றவற்றில் மட்டுமின்றி, கெட்ட சக்தியை வெளியேற்றவும் உதவும். சரி, இப்போது பச்சை எலுமிச்சையைக் கொண்டு வீட்டில் இருந்து எதிர்மறை ஆற்றல்களை வெளியேற்றுவது எப்படி என்று காண்போம்.

வழி இது மிகவும் எளிய வழி. இந்த வழியில் 3 பச்சை எலுமிச்சையை எடுத்துக் கொண்டு, வீட்டின் பல்வேறு பகுதியில் வைக்க வேண்டும். அப்படி வைத்த பச்சை எலுமிச்சை எப்போது மஞ்சளாகவோ அல்லது கருப்பாகவோ மாறுகிறதோ, அப்போது அதை தூக்கி எறிந்துவிட்டு, அப்பகுதியில் மீண்டும் புதிய பச்சை எலுமிச்சையை வைக்க வேண்டும்.

வழி மழை நீரில் எலுமிச்சையின் தோலைப் போட்டு கொதிக்க வைத்து, வீட்டில் தெளிக்க வேண்டும். இதனால் கெட்ட சக்திகள் அனைத்தும் அகலும்

வழி ஒரு பீங்கான் கூடையில் 9 எலுமிச்சையை வைத்து, ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். அப்படி கூடையில் வைக்கும் போது 8 எலுமிச்சையை வைத்து, நடுவே ஒரு எலுமிச்சையை வைக்கவும். இதனால் வீட்டில் செல்வ வளம் பெருகும்.

வழி வேலை செய்யும் இடம் அல்லது மேஜையில் 3 எலுமிச்சையை வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

வழி ஒரு கண்ணாடி பௌலில் 3 எலுமிச்சையை வைத்து, வீட்டில் உள்ள மேஜையில் வைத்தால், உறவுகள் பலப்படும்.

வழி வெளியே செல்லும் போது 1 பச்சை அல்லது மஞ்சள் நிற எலுமிச்சையை பாக்கெட் அல்லது பையில் வைத்துக் கொண்டு சென்று, வீடு திரும்பியதும், இரவில் அந்த எலுமிச்சையை வெளியே எடுத்துப் பாருங்கள். அந்த எலுமிச்சை நன்கு காய்ந்திருந்தால், உங்களை நோக்கி வந்த எதிர்மறை ஆற்றலை எலுமிச்சை ஈர்த்துள்ளது என்று அர்த்தம்.

வழி வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை வெளியேற்ற, ஒரு எலுமிச்சையை 4 பகுதிகளாக அறுத்து, உப்பு பரப்பிய தட்டின் நடுவே வைத்து, கட்டிலுக்கு அடியில் வைத்து தூங்குங்கள். மறுநாள் காலையில் அந்த எலுமிச்சையைக் கையால் தொடாமல், ஒரு பிளாஸ்டிக் கவரில் உப்புடன் சேர்த்து போட்டு தூக்கி எறிந்துவிடுங்கள். இப்படி தொடர்ந்து 3 நாட்கள் செய்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதப்பிதவறி கூட சீரகத்தை அதிகமா சாப்பிடாதீங்க! அளவாக பயன்படுத்தினால் நன்மை கிடைக்கும்!
Next articleஇந்த அறிகுறிகள் எவ்வளவு பெரிய பிரச்சனையின் தீவிரமானவை என்று தெரியுமா?