பசி தாங்காமல் குப்பைக்கிடங்கில் தஞ்சம் புகுந்த விலங்குகள், பறவைகள்- விஷம் வைத்துக் கொன்ற கொடூரம்…!

0

பசி தாங்காமல் குப்பைக்கிடங்கில் தஞ்சம் புகுந்த விலங்குகள், பறவைகள்- விஷம் வைத்துக் கொன்ற கொடூரம்…!

தற்போது கொரோனா ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ள இத்தருணத்தில் உணவின்றி தவித்த விலங்குகள் குப்பை கிடங்குகளில் தஞ்சம் புகுந்ததால் விஷம் வைத்து கொன்ற சம்பவம் நீலகிரி யில் நிகழ்ந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் ஒட்டுப்பட்டரை பகுதியில் குன்னூர் நகராட்சி குப்பை கிடங்குஉள்ளதால் இக்கிராமங்களில் உள்ள நாய், பூனை, பன்றி, காகம் போன்றவை குப்பை கிடங்கில் கிடைக்கும் உணவுப் பொருட்களை தினமும் உண்டு வந்துள்ளன.

இந்நிலையில் கடந்த 6ம் தேதி விலங்குகள் திடீரென கீழே விழுந்து உயிரிழந்தன. நாய்‍- 6, காகம் -4, பூனை‍-1 , காட்டுப்பன்றி ஆகியன இறந்துள்ளதால் தகவலறிந்த கால்நடை துறை இணை இயக்குநர் டாக்டர் வேடியப்பன் தலைமையில் கால்நடை டாக்டர்கள் அங்கு சென்று பார்த்த போது ஒரு சில விலங்குகள் உயிருக்கு போராடி கொண்டிருந்தது. அவைகளுக்கு முதலுதவிகளைச் செய்தும் எந்த பயனும் இல்லாமல் இறந்து போயின. இதையடுத்து விலங்குகளுக்கு பிரேத பரிசோதனையும் செய்தனர்.

அரக்க குணம் படைத்த யாரோ குப்பைக் கிடங்கில் கொட்டப்படும் கோழிக் கழிவில் விஷம் வைத்துக் கொன்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் யாரென்று கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉங்கள் நாவின் இனிப்பு தேடலை நீங்கள் எவ்வாறு இயற்கை முறையில் கட்டுப்படுத்த முடியும் என்று ஆயுள்வேதம் சொல்கிறது?
Next articleவீட்டில் நடிகைகள் போடும் ஆட்டம்: உடலை வளைத்து நெளித்து கவர்ச்சி நடனமாடிய சாயிசா வீடியோ வைராலோ வைரல்.