நீளமாக கூந்தல் வளர உதவும் இயற்கை ஷாம்பு பூந்திக் கொட்டை!

0
1854

இயற்கை மனிதருக்கு அளிக்கும் பல அரிய கொடைகளில் ஒன்று மரங்கள். இவை உடலுக்கும், மனதுக்கும் பலவித நன்மைகள் தருவதாக அமைந்திருக்கும். சில மரங்களின் பயன்கள், சாப்பிடும் மருந்தாகவும், சில வெளி உபயோகத்துக்கும் என்ற வகையில் இருக்கும். சில மரங்கள் உள்ளுக்கும் மேலுக்கும் பயன்கள் தரும் வகையில் இருக்கும். அப்படி ஒரு பயன்தரும் மரம்தான் பூந்திக்கொட்டை மரம் எனும் மணிப் பூவந்தி மரம்.

கிராமங்களில், பூந்திக்கொட்டை மரம், பூவந்தி மரம், சோப்புக்காய் மரம் என்று அழைக்கப்படும் மணிப்பூவந்தி மரம், அடர்ந்த மலைப் பகுதிகளில் பரவலாக வளரக் கூடியது. தமிழகத்தின் ஆனைமலை, பழனி மற்றும் கொல்லிமலைப் பகுதிகளின் உயரமான இடங்களில் காணப்படும் மணிப்பூவந்தி மரம், பல ஆயிரம் ஆண்டு கால தொன்மையான பாரம்பரியம் கொண்ட, பழம்பெரும் மரங்களில் ஒன்றாகும்.

பூந்திக் கொட்டையின் நன்மைகள்

இந்த மரத்தின் இலைகள் சற்றே நீண்ட வடிவம் கொண்டவை, வெண்மை வண்ண மலர்கள் கொத்தாகப் பூத்துக் குலுங்கும். கோடைக் காலத்தில் காய்க்கும் இந்த மரத்தின் காய்கள் மற்றும் பழங்கள், மிக்க மருத்துவ நன்மைகள் கொண்டவை.

பன்னெடுங்காலம் முன்னரே, மணிப்பூவந்தி மரம், தமிழர்களின் குளியலில் முக்கிய இடம் பெற்ற, ஒன்றாகத் திகழ்ந்து வந்திருக்கிறது.

இந்த மரத்தின் பழங்களை, கொட்டை நீக்கிவிட்டு, கைகளால் நன்கு பிசைந்து நீரில் இட, ஊறிய சற்று நேரத்தில் எடுத்தால், நல்ல மணத்துடன் கூடிய நுரை உண்டாகும். இந்த நீரை, எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் காலங்களில், தலையில் உள்ள எண்ணெயை நீக்க, தலையில் தேய்த்துக் குளிக்க, எண்ணெய் முற்றிலும் நீங்கி விடுவதோடு மட்டுமல்லாமல், தலையில் உள்ள அழுக்குகளையும் வெளியேற்றி தலைமுடியை, பளபளப்பாகவும், மிருதுவாகவும் ஆக்கும் தன்மை படைத்ததாகும்.

இதனாலேயே அக்காலங்களில், அரப்புத் தூளுடன் மணிப்பூவந்தி பழங்களை கலந்து அரைத்து, தலைக்குத் தேய்த்துக் குளித்து, எண்ணெய்ப் பிசுக்கு மற்றும் அழுக்குகளை நீக்கும் இயற்கை ஷாம்பூவாகப் பயன்படுத்தி வந்தனர்.

மேலும், உடல் அழுக்கை நீக்கும் இயற்கை சோப் போலவும், இதனை அக்கால மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

மனிதர்களின் புற அழுக்கை நீக்குவதோடு மட்டுமல்லாமல், மனிதர்களின் அகத்தில் ஏற்படும் வியாதிகளையும் போக்க வல்லவை, இந்த மணிப்பூவந்தி பழங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: