நீர்க்கடுப்பு மற்றும் நீர் எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்த இவற்றை கஷாயம் செய்து காலையும் மாலையும் குடித்துவரவும் !

0
1616

நீர்க்கடுப்பு மற்றும் நீர் எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்த இவற்றை கஷாயம் செய்து காலையும் மாலையும் குடித்துவரவும் !

அறிகுறிகள்: நீ்ர்க்கடுப்பு. சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுதல்.
தேவையானவை: நீர்முள்ளி விதை. நெய். தேங்காய் பால்.

செய்முறை: மூன்று விராகனிடை நீர்முள்ளி விதையை நெய் விட்டு வெதுப்பிப் பொடித்து அரைக்கால்படி தேங்காய்ப் பாலில் கலந்து 3 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீர்க்கடுப்பு குறையும்.

அறிகுறிகள்: சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல். நீர்க்கடுப்பு.

தேவையானவை: எலுமிச்சை பழம். கற்கண்டு

செய்முறை: வெந்நீரில் எலுமிச்சை பழத்தை பிழிந்து அதில் கற்கண்டை கலந்து தொடந்து சாப்பிட்டு வந்தால் நீர்க்கடுப்பு குறையும்.

நீர்க்கடுப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் உடலுக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காததுதான் .3 லிட்டர் தண்ணீர் தினமும் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும். பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால், தாகம் அடங்கும்வரை தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் சரியாகக் குடிக்காவிட்டால், சிறுநீரில் உள்ள‌ தாதுகள் அதிகமாகச் சேர்ந்து படிகமாகி, சிறுநீரின் அடர்த்தி அதிகரித்துவிடும். இதனால் தான் சிறுநீர் போகும்போது எரிச்சல் மற்றும் கடுப்பு ஏற்படுகிறது.

அறிகுறிகள்: சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுதல். நீர்க்கடுப்பு.

தேவையானவை: சந்தனம், பசும் வெண்ணெய்.

செய்முறை: சந்தனம், பசும் வெண்ணெய் ஆகியவற்றை ஒரு கொட்டைப் பாக்கு அளவு எடுத்து அரைக்கால்படி வெந்நீரில் கலந்து குடித்து வர நீர்க்கடுப்பு குறையும்.

அறிகுறிகள்: நீர்க்கடுப்பு.

தேவையானவை: எலுமிச்சம் பழச்சாறு. நல்லெண்ணெய்.

செய்முறை: எலுமிச்சம் பழச்சாறுடன், நல்லெண்ணெயை சம அளவு கலந்து குடித்து வர நீர்க்கடுப்பு குறையும்.

அறிகுறிகள்: நீர்க்கடுப்பு.

தேவையானவை: எலிக்காதிலை.

செய்முறை: ஒரு லிட்டர் தண்ணீரில் 50 கிராம் எலிக்காதிலையைக் குறுக்காக வெட்டி போட்டு அரை லிட்டராக நன்கு காய்ச்சி வடித்து 150 மில்லி அளவு மூன்று நாட்கள் மூன்று வேளை சாப்பிட வர சிறுநீர் கடுப்பு குறையும்.

ஒருவர் நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்திப்பதால் அதன் அடர்த்தி அதிகமாகி தொற்று ஏற்பட்டு நீர்க்கடுப்புக்கு வழிவகுக்கும். மற்றும் மன அழுத்தம், பரபரப்பான வாழ்க்கைமுறை காரணமாகவும் இன்றைய இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் நீர்க்கடுப்பு அடிக்கடி ஏற்பட்டு தொல்லை தருவதாக மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.

அறிகுறிகள்: சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுதல்.


தேவையானவை: இளநீர், சீரகம், சீனி, பாசிப்பயிறு.

செய்முறை: இளநீரில் சிறிய துளையிட்டு அதில் சீரகம், சீனி, பாசிப் பயிறு ஆகியவற்றை போட்டு ஓரிரவு வைத்து காலையில் மருந்தை எடுத்து அரைத்து இளநீரில் கரைத்து 3 நாட்கள் 6 வேளை சாப்பிட்டு வந்தால் நீர்கடுப்பு குறையும்.

அறிகுறிகள்: சிறுநீர்க் கடுப்பு, சிறுநீர் எரிச்சல்.

தேவையாவை: செண்பகப் பூ.

செய்முறை: செண்பகப் பூ-வினை கஷாயம் செய்து காலையும் மாலையும் குடித்து வந்தால் சிறுநீர் பெருகும். நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் ஆகியவை குணமாகும்.

அறிகுறிகள்: நீர்க்கடுப்பு.

தேவையானவை: கரிசலாங்கண்ணி, தயிர்.

செய்முறை: கரிசலாங்கண்ணி இலைச்சாறை, எருமைத் தயிரில் கலந்து சாப்பிட்டு வந்தால் நீர்க்கடுப்பு குறையும்.

அறிகுறிகள்: நீர்க்கடுப்பு.

தேவையானவை: வல்லாரை.

செய்முறை: வல்லாரை இலையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நீர்க்கடுப்பு குறையும்.

அது மட்டுமன்றி சிறுநீரகத்தில் தொடங்கி சிறுநீர்ப் புறவழிவரை சிறுநீர் செல்லும் பாதையில் கல் அல்லது பாக்டீரியா நோய் தொற்று இருந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும். அப்போது சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வலி, ரத்தம் கலந்து வருதல், குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்படும். சிறுநீரகக் கல் நகரும்போதும் சிறுநீரகக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்போதும், வயிற்றில் வலி உண்டாகும். முதுகில், விலா எலும்புகளுக்குக் கீழ் திடீரெனக் கடுமையான வலி உண்டாகி, முன் வயிற்றுக்குப் பரவும். சில நேரம் அடிவயிற்றில் வலி தோன்றி, பிறப்புறுப்புக்குப் பரவும். சிறுநீர்ப் பையில் கல் இருந்தால், தொப்புளுக்குக் கீழ் வலி தொடங்கி, சிறுநீர் வெளியேறுகிற புறவழித் துவாரம்வரை பரவும். இதனால் மிகவும் ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன!

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅதிகமாக தலைமுடி உதிர்ந்தால் இதில் எலுமிச்சை பழச்சாற்றை கலந்து குழைத்து தலையில் தேய்த்து குளியுங்கள் !
Next articleஹீமோகுளோபின் குறைபாட்டால் உடலில் ஏற்படும் அசதி, உடல் வலி, சோம்பேறித்தனம், களைப்பு , ஆர்வமின்மை என்பவற்றை போக்கி ஹீமோகுளோபினை அதிகரிக்க இதை செய்யுங்க !